பொது செய்தி

தமிழ்நாடு

கோஹ்லி அணிக்கு கொண்டாட்டம் ; கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி

Updated : ஏப் 15, 2021 | Added : ஏப் 15, 2021
Share
Advertisement
சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியில் பெங்களூரு அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் அரைசதம் அடித்தார்.இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர், பீல்டிங் தேர்வு

சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., போட்டியில் பெங்களூரு அணி, 6 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் அரைசதம் அடித்தார்.



latest tamil news


இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வார்னர், பீல்டிங் தேர்வு செய்தார்.


latest tamil news


மேக்ஸ்வெல் அரைசதம்
பெங்களூரு அணிக்கு கேப்டன் கோஹ்லி, தேவ்தத் படிக்கல் (11) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. ஷாபாஸ் (14) விரைவில் கிளம்பினார். கோஹ்லியுடன் இணைந்தார் மேக்ஸ்வெல். கோஹ்லி, 29 பந்தில் 33 ரன் எடுத்த போது, ஹோல்டர் வேகத்தில் சரிந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிவிலியர்ஸ் (1), வந்த வேகத்தில் ரஷித் கான் சுழலில் அவுட்டானார்.வாஷிங்டன் சுந்தர் (8) கைவிட, நடராஜன் 'வேகத்தில்' கிறிஸ்டியன் (1) 'சரண்' அடைந்தார். கடைசி நேரத்தில் தனி ஒருவனாக போராடிய மேக்ஸ்வெல் (59) ஐ.பி.எல்., அரங்கில் 7வது அரைசதம் அடித்தார். தவிர இத்தொடரில் ஐந்து ஆண்டுக்குப் பின் அடித்த அரைசதம் இது. பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்கள் மட்டும் எடுத்தது.


latest tamil news



வார்னர் ஆறுதல்
எளிய இலக்கைத் துரத்திய ஐதராபாத் அணியின் சகா (1) ஏமாற்றிய போதும், வார்னர் 54 ரன்கள் எடுத்து உதவினார். ஷாபாஸ் அகமது வீசிய 17வது ஓவரில் பேர்ஸ்டோவ் (12), மணிஷ் பாண்டே (38), அப்துல் சமது (0) அவுட்டாக, போட்டியில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. விஜய் சங்கர் (3), ஹோல்டர் (4) நிலைக்கவில்லை. கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டன.ஹர்ஷல் படேல் பந்து வீசினார். முதல் 2 பந்தில் 2 ரன் கிடைத்தன. நோ பாலாக வீசப்பட்ட 3வது பந்தில் பவுண்டரி அடித்தார் ரஷித் கான். அடுத்த இரு பந்தில் ரஷித் கான் (17), ஷாபாஸ் நதீம் (0) அவுட்டாக, ஐதாராபாத் தோல்வி உறுதியானது. 20 ஓவரில் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் மட்டும் எடுத்தது. பெங்களூரு அணி 6 ரன்னில் வெற்றி பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X