இந்தியா

அம்பானிக்கு மிரட்டல் விசாரணையில் திருப்பம்

Added : ஏப் 15, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
மும்பை :மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே, வெடிகுண்டுகளுடன் கார் மீட்கப்பட்ட விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸே, வழக்கை திசை திருப்ப முயன்றது தெரியவந்துள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. மும்பையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி
அம்பானிக்கு மிரட்டல் ,விசாரணை, திருப்பம்

மும்பை :மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே, வெடிகுண்டுகளுடன் கார் மீட்கப்பட்ட விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர்
சச்சின் வாஸே, வழக்கை திசை திருப்ப முயன்றது தெரியவந்துள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. மும்பையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே, வெடிபொருள் நிரப்பப்பட்ட கார் ஒன்று, பிப்., 25ல் மீட்கப்பட்டது.


latest tamil news



இந்த வழக்கை விசாரித்து வந்த, உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாஸை கைது செய்யப்பட்டார். அவரிடம், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகின்றது.
இந்த விசாரணையில், பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து, போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:அம்பானி வீட்டருகே, அவுரங்காபாதில் திருடப்பட்ட ஒரு காரை வெடிபொருட்களுடன் நிறுத்துவதற்கு, வாஸே திட்டமிட்டிருந்தார். இதற்காக, அவர் இரண்டு பேரை தேர்வு செய்திருந்தார். அதன்பிறகு, அவர்களை, 'என்கவுன்டரில்' சுட்டுக் கொன்று, வழக்கை முடிக்க அவர் திட்டமிட்டிருந்தார்
ஆனால், அது நடக்கவில்லை. அந்த இரண்டு பேரில், ஒருவருடைய பாஸ்போர்ட், வாஸேயின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. அதைவைத்து நடத்திய விசாரணையில், இது தெரிய வந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-ஏப்-202117:47:54 IST Report Abuse
தமிழவேல் அந்த காரில் ஒரு கடிதம் இருந்ததே... அதுபற்றி எந்த செய்தியையும் காணோம்..
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
15-ஏப்-202113:01:08 IST Report Abuse
Sridhar இதுல அந்த உத்தவ் தாக்கரே பங்கு என்னான்னு சீக்கிரம் சொல்லுங்கப்பா சும்மா அம்ப மட்டும் விசாரிச்சிகிட்டு இருந்தா நேரம் போயிடும் அப்புறம் மக்கள் மறந்துடுவாங்கங்கற என்னமா? அவ்வளவு பெரிய அம்பானியை ஒரு சின்ன துரும்பு தாக்கநினைக்குமா இல்ல காரணம்தான் இருக்குமா? அப்புறம் ஏன் உண்மை குற்றவாளிகளை விட்டுட்டு இந்த சின்ன போலீஸ்காரனையே கொடைஞ்சுக்கிட்டு இருக்காங்க?
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
15-ஏப்-202112:34:35 IST Report Abuse
சீனி பெரிய இடத்து மாமூல் தகறாரு போல, கடந்த 10 ஆண்டுகளில் 24000 கோட்டீஸ்வரர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டு குடியுரிமை பெற்றுவிட்டனர் என்று செய்தி உள்ளது. அம்பானிக்கே இந்த நிலை எனில், நம்ம சாதாரண குடிமகன் ஆறுமுகம் நிலை என்னாவது ? நம்ம உளுத்துபோன சட்டத்தால், இந்த அதிகாரி 1 வருடம் சஸ்பெண்ட் ஆகி திரும்ப மாமூல் வாழ்க்கையை தொடங்கிவிடுவார். மாமூல் அதிகாரிகளை, பாக்கிஸ்தான், சீன எல்லைக்கு மாற்றி பணியாற்ற அனுப்ப திட்டம் வரவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X