புதிய 'யூடியூப் சேனல்' துவக்கியது காங்.,

Updated : ஏப் 15, 2021 | Added : ஏப் 15, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
புதுடில்லி :காங்கிரஸ் கட்சி, தங்கள் செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில், 'ஐஎன்சி டிவி' என்ற பெயரில், புதிய 'யூடியூப்' சேனலை நேற்று துவக்கியது.தங்கள் தரப்பு செய்திகளை முழுமையாக வெளியிடாமல், ஊடகங்கள் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக, காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.நாளுக்கு நாள், காங்., பலவீனமடைந்து
புதிய 'யூடியூப் சேனல்'  காங்.,

புதுடில்லி :காங்கிரஸ் கட்சி, தங்கள் செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில், 'ஐஎன்சி டிவி' என்ற பெயரில், புதிய 'யூடியூப்' சேனலை நேற்று துவக்கியது.தங்கள் தரப்பு செய்திகளை முழுமையாக வெளியிடாமல், ஊடகங்கள் பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக, காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நாளுக்கு நாள், காங்., பலவீனமடைந்து வருவது குறித்து, செய்தியாளர்கள் ராகுலிடம் சமீபத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'ஊடகங்கள் உட்பட நாட்டின் ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் காங்.,குக்கு எதிராக செயல்படுகிறது' என அவர் தெரிவித்தார்.


latest tamil news




இதையடுத்து, தங்கள் கட்சிக்கென தனி காட்சி ஊடகத்தை துவங்க காங்., தலைமை முடிவு செய்தது. இந்நிலையில், 'ஐஎன்சி டிவி' என்ற யூடியூப் சேனலை, காங்., நேற்று துவக்கியது.
இதில், காங்., தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா மற்றும் மூத்த தலைவர்களின் கருத்துக்கள் ஒளிபரப்பாகும். இதில், தொடர்ந்து 24 மணி நேரமும், நேரலையில் செய்திகள் ஒளிபரப்பப்படும் என கூறப்படுகிறது.துவக்க நாளான நேற்று, முதல் நிகழ்ச்சியாக, சுதந்திர போராட்டத்தில், பத்திரிகையாளராக மஹாத்மா காந்தி ஆற்றிய பணிகள் குறித்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
இதில், பத்திரிகைகளில் காந்தி எழுதிய கட்டுரைகளை தொகுப்புகள் காண்பிக்கப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஏப்-202108:20:52 IST Report Abuse
பேசும் தமிழன் அந்த சேனலில்... அப்படியே உங்கள் ஆட்சியில்... உங்கள் இத்தாலி அம்மா ஆசியுடன்... கொன்று குவிக்கப்பட்ட ஈழதமிழர்கள் படுகொலை பற்றியும் செய்தி போடுங்கள்... அப்போ தான் கழுவி, கழுவி ஊத்த வாதியாக இருக்கும்
Rate this:
Cancel
15-ஏப்-202117:36:48 IST Report Abuse
ஆப்பு இன்னும் பழைய நூறு வருஷங்களுக்கு முன் முக்தியடைந்த தலிவர்களை வெச்சே ஓட்ட வேண்டிய பரிதாபம்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
15-ஏப்-202116:29:08 IST Report Abuse
r.sundaram இந்தியன் நேஷனல் காங்கிரஸ் என்பதை பயன்படுத்துவதற்கு இவர்களுக்கு உரிமை இருக்கிறதா என்ன? தற்போது இருப்பது இந்திரா காங்கிரஸ். காங்கிரஸ் என்ற பெயர் வைத்துகொண்டால் ஐ என் சி ஆக முடியுமா? காந்தி என்று பெயர் வைத்துக் கொண்டால் அவர்கள் எம் கே காந்தி அல்லது அவரது வாரிசு ஆக முடியுமா? இதை ஏன் யாரும் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X