அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : நாடு எப்படி உருப்படும்?

Updated : ஏப் 15, 2021 | Added : ஏப் 15, 2021 | கருத்துகள் (66)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :வி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: கொடிய கொரோனாவின் இரண்டாவது அலையிலும், மக்கள் ஓட்டுச்சாவடிக்கு சென்று, 72 சதவீத ஓட்டுக்களைப் பதிவு செய்துள்ளனர். ஜனநாயகத்தை காத்த அவர்கள், பாராட்டுக்கு உரியோர்.'இந்த மக்களை புரிஞ்சுக்கவே முடியாது' என, அரசியல் கட்சித் தலைவர்களும்,

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
வி.எம்.கலைப்பித்தன், கடலுாரிலிருந்து எழுதுகிறார்: கொடிய கொரோனாவின் இரண்டாவது அலையிலும், மக்கள் ஓட்டுச்சாவடிக்கு சென்று, 72 சதவீத ஓட்டுக்களைப் பதிவு செய்துள்ளனர். ஜனநாயகத்தை காத்த அவர்கள், பாராட்டுக்கு உரியோர்.'இந்த மக்களை புரிஞ்சுக்கவே முடியாது' என, அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும், மே, 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, தலையை பிய்த்துக் கொள்வர். அதே நேரத்தில் மக்களுக்கும், எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.latest tamil newsஏனெனில், இரு திராவிடக் கட்சிகளும் அள்ளி வீசிய வாக்குறுதிகள் அப்படி. இல்லத்தரசிகளுக்கு, 1,000 ரூபாயா அல்லது 1,500 ரூபாயா எது கிடைக்கும்? இலவச கேபிள் இணைப்பு, ஆறு சிலிண்டர், அனைத்து வங்கி கடன்களும் ரத்து, இலவச வீடு போன்றவற்றில், எவை எல்லாம் கிடைக்கும் என்ற கனவில் மிதக்கின்றனர்.ஆனால், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில், சில மட்டுமே நிறைவேற்றப்படும்; பெரும்பாலானவை, கானல் நீராகி விடும்.இது ஒவ்வொரு ஆட்சியிலும் நடந்தாலும், மக்கள் ஏமாறுவதையும், அரசியல்வாதிகள் ஏமாற்றுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆட்சிக்கு வரும் நபர்கள், கொள்ளை அடிப்பதில் மும்முரம் காட்டுவர்; மக்களுக்கு, 'பிஸ்கட்' போல, சில இலவசங்கள் துாக்கி வீசப்படும்.


latest tamil newsஅட அப்படியே, ஆட்சி அமைக்கும் கட்சி, தான் அறிவித்த எல்லா வாக்குறுதிகளும் நிறைவேற்றினால், மக்கள் வாழ்வதற்கு, அரசு வழங்கும் இலவசங்களே போதுமானது. எதற்கு வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு வந்து விடும். இப்போதே பலர், உழைக்க மறந்து, 'டாஸ்மாக்' கடையில் மயங்கிக் கிடக்கின்றனர்.இந்நிலையில், மாதந்தோறும் இலவசமாக பணமும் கொடுத்தால் நாடு, 'உருப்படும்!'

Advertisement


வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஏப்-202103:08:11 IST Report Abuse
Krishnamoorthy Mandela movie must be telecasted by election commission few days before election in all wards of Tamilnadu. Atleast 20 percent of people will get changed.
Rate this:
Cancel
16-ஏப்-202103:08:11 IST Report Abuse
Krishnamoorthy Mandela movie must be telecasted by election commission few days before election in all wards of Tamilnadu. Atleast 20 percent of people will get changed.
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
16-ஏப்-202100:00:08 IST Report Abuse
naadodi 300 கோடி ரூபாயை i-pac நிறுவனத்துக்கு அளித்ததில் இருந்தே இது கொள்ளையடிக்க செய்யப்படும் முதலீடு என்பது உறுதி. மக்களை மக்காக்கி அதில் வாழும் வீணர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X