சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Updated : ஏப் 15, 2021 | Added : ஏப் 15, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்1. ரூ.39 லட்சம் கையாடல் காசாளர் கைதுவிருதுநகர் : திருத்தங்கல் தனியார் மெட்ரிக் பள்ளியில் ரூ.39 லட்சம் கையாடல் செய்த காசாளர், கணக்காளரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.அப்பள்ளியில் காசாளராக சிவகாசியை சேர்ந்த பானுமதி 36, கணக்காளராக சிவகாசி பழைய விருதுநகர் ரோட்டை சேர்ந்த செல்வக் குமார் 45, பணிபுரிந்தனர். இருவரும் கூட்டு சேர்ந்து 2018 முதல் 2020 வரை கல்வி

தமிழக நிகழ்வுகள்
1. ரூ.39 லட்சம் கையாடல் காசாளர் கைது
விருதுநகர் : திருத்தங்கல் தனியார் மெட்ரிக் பள்ளியில் ரூ.39 லட்சம் கையாடல் செய்த காசாளர், கணக்காளரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

அப்பள்ளியில் காசாளராக சிவகாசியை சேர்ந்த பானுமதி 36, கணக்காளராக சிவகாசி பழைய விருதுநகர் ரோட்டை சேர்ந்த செல்வக் குமார் 45, பணிபுரிந்தனர். இருவரும் கூட்டு சேர்ந்து 2018 முதல் 2020 வரை கல்வி கட்டணத்தில் முறைகேடு செய்து ரூ.39 லட்சத்து 46 ஆயிரத்து 435 கையாடல் செய்தது தெரியவந்தது. மாவட்ட குற்ற பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.latest tamil news2. ராஜபாளையம் தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் கொலை 3 பட்டதாரிகள் கைது
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முன்விரோதத்தால் தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை ஈஸ்வரன் 47, வெட்டி கொலை செய்யப்பட்டார். பழிக்கு பழியாக நடந்த சம்பவத்தில் பட்டதாரிகள் மூவர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் ராஜபாளையம் 13-வது வார்டு தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை ஈஸ்வரன், சகோதரர் சக்தி கணேசன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 2020 நவம்பரில் ஜாமினில் வந்தனர். உயிருக்கு பயந்து அண்ணாமலை ஈஸ்வரன் குடும்பத்துடன் நாகர்கோவிலில் வசித்து வந்தார்.


latest tamil newsதமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராஜபாளையம் கிருஷ்ணாபுரம் விநாயகர் கோயிலில் வழிபட காரில் வந்தார். இதையறிந்தவர்கள் நேற்று மதியம் 1:15 மணிக்கு காரை வழிமறித்து அண்ணாமலை ஈஸ்வரனை வெட்டி படுகொலை செய்தனர். இதுதொடர்பாக அதே பகுதி பட்டதாரி இளைஞர்களான குழந்தை வேல் குமார் 22, ஜெகதீஸ்வரன் 22, மதியழகன் 27, ஆகியோரை சேத்துார் தாலுகா போலீசார் கைது செய்தனர். தாமரைக்கனி கொலைக்கு பழி தீர்த்ததாக போலீசாரிடம் கூறினர்.

3. துாத்துக்குடி தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு
துாத்துக்குடி: துாத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள தியேட்டரில் நேற்று முன்தினம் இரவில் 'கர்ணன்' படத்தின் இரண்டாம் காட்சிக்கு 5 பேர் வந்தனர். போதையில் இருந்ததால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆத்திரமடைந்தவர்கள் சிறிது நேரத்துக்கு பின் மீண்டும் வந்து பெட்ரோல் நிரப்பிய மது பாட்டில்களில் தீயிட்டு தியேட்டர் மீது வீசினர். யாருக்கும் காயமில்லை. தியேட்டரில் சினிமா தொடர்ந்து இயக்கப்பட்டது. ராஜகோபால்நகர் மரியமிக்கேல் அரவிந்த் உள்பட 5 பேர் மீது வழக்குபதிந்து தென்பாகம் போலீசார் தேடுகின்றனர்.

4. காரில் கடத்திய போலி மது பறிமுதல்
மூணாறு : மூணாறு அருகே ஆனச்சாலில் மாகியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 150 லிட்டர் போலி மதுவுடன் உடும்பன்சோலை தாலுகா சதுரங்கபாறை, வட்டபாறையைச் சேர்ந்த சோனு 28,வை எக்சைஸ் போலீசார் கைது செய்தனர். கேரளாவில் நேற்று விஷூ பண்டிகை என்பதால் அதனை குறி வைத்து விற்பனைக்காக மது கடத்தி வந்ததாக தெரியவந்தது.


latest tamil news
5. கர்ப்பிணியை தாக்கி வழிப்பறி வழக்கில் கடலுார் நபர் கைது
விழுப்புரம்:விழுப்புரம் அருகே கர்ப்பிணியை தாக்கி நகையை பறித்துச் சென்றவரை தனிப்படை போலீசார் கைது செய்து நகை மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் அடுத்த மரகதபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். சென்னை ஆயுதப்படை போலீஸ்காரர். இவரது மனைவி கவியரசி31; இவர் கடந்த 8 ம் தேதி காலை 11:15 மணிக்கு மரகதபுரம் - கோவிந்தபுரம் சாலை அருகே தனது 2 வயது ஆண் குழந்தையுடன் கணவருக்காக காத்திருந்தார்.அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் கவியரசியை இரும்பு ராடால் தாக்கி அவர் அணிந்திருந்த தாலி சரடு உட்பட 11 சவரன் நகைகளை பறித்துச்சென்றார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.விழுப்புரம் டி.ஐ.ஜி. பாண்டியன் எஸ்.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் டவுன் டி.எஸ்.பி. நல்லசிவம் தலைமையில் தாலுகா இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் சப்-இன்ஸ்பெக்டர்கள் மருது பாலசிங்கம் பாஸ்கர் பிரகாஷ் சுந்தரராஜன் குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டியன் கண்ணன் ஏட்டு சீனுவாசராஜா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.


latest tamil news
தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் விழுப்புரம் - ஏனாதிமங்கலம் சாலையில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது டி.என். 31 சி.சி. 3789 பதிவெண் கொண்ட பைக்கில் வந்த ஆசாமி போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்றார். அப்போது அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.போலீசார் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் போலீசாரின் விசாரணையில் அவர் கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகராம்பட்டு காலனியை சேர்ந்த சுந்தரம் மகன் அறிவழகன்39; என்பதும் இவர் கவியரசியை தாக்கி நகையை பறித்துச்சென்றதை ஒப்பு கொண்டார்.இதையடுத்து போலீசார் அறிவழகனை கைது செய்து அவரிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 11 சவரன் நகையை மீட்டனர். பின் அவரை விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோார்ட் எண் 1 ல் ஆஜர்படுத்தி வேடம்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

விரைவாக குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.கைதாகிய அறிவழகன் மீது கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திலும் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் உள்ளிட்ட இடங்களில் திருட்டு வழிப்பறி ஆகிய 10 வழக்குகள் நிலுவையில் உள்ளதும். இவர் குண்டாசில் சிறை சென்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நிகழ்வுகள்:
நாடு கடத்தப்பட்டவர் கைது
புதுடில்லி: கேரளாவில், ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முகமது ஹபிஸ் வட்டப்பரம்பில் உமர் என்பவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றார். இது தொடர்பாக, கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சி.பி.ஐ., கோரிக்கையை ஏற்று, அபுதாபி மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள், முகமது ஹபிசை இந்தியாவிற்கு நாடு கடத்தினர். டில்லி வந்த அவரை, கைது செய்த சி.பி.ஐ., அதிகாரிகள், கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


latest tamil newsஉலக நிகழ்வுகள் :-இந்திய வம்சாவளி ஓட்டுனருக்கு 22 ஆண்டு சிறை
மெல்பர்ன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த லாரி ஓட்டுனர் மெஹிந்தர் சிங், 48. ஆஸ்திரேலியா வில் வசித்து வரும் இவர், போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையானார்.

கடந்த ஆண்டு ஏப்ரல், 22ம் தேதியன்று, விக்டோரியா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில், லாரி ஓட்டி சென்றார்.அப்போது தீவிரமான போதை மருந்து மயக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.மேலும், சரியான துாக்கமின்றி போதையில் லாரி ஓட்டி சென்ற மொஹிந்தர் சிங், நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார் மீது லாரியை மோதினார்.இந்த விபத்தில், நான்கு போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.விக்டோரியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், நேற்று இறுதி தீர்ப்பு வழங்கப் பட்டது.ஓட்டுனர் மொஹிந்தர் சிங்குக்கு, 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார். இதில், 18 ஆண்டுகள் அவர் 'பரோலில்' வெளியே வர முடியாதபடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X