'இந்தியா எந்தவித நெருக்கடிக்கும் பணியாது'

Updated : ஏப் 15, 2021 | Added : ஏப் 15, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி :''பருவநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில், இந்தியா எந்தவித நெருக்கடிக்கும் அடிபணியாது,'' என, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் உறுதி பட தெரிவித்துள்ளார்.பிரகாஷ் ஜாவடேகர், டில்லியில், பிரான்ஸ் துாதர், ழான் ஒய்வஸ் லீ டிரைவரை சந்தித்தார். அதன் பின், அவர் கூறியதாவது:பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தப்படி, காற்று மாசுபாட்டை

புதுடில்லி :''பருவநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில், இந்தியா எந்தவித நெருக்கடிக்கும் அடிபணியாது,'' என, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் உறுதி பட தெரிவித்துள்ளார்.



latest tamil news




பிரகாஷ் ஜாவடேகர், டில்லியில், பிரான்ஸ் துாதர், ழான் ஒய்வஸ் லீ டிரைவரை சந்தித்தார். அதன் பின், அவர் கூறியதாவது:பாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தப்படி, காற்று மாசுபாட்டை குறைக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வரும் ஒரே நாடு, இந்தியா தான்.
அதேசமயம், பருவ நிலை மாற்ற இலக்கை எட்டுவது தொடர்பான நடவடிக்கைகளில், இந்தியா எந்தவித நெருக்கடிக்கும் அடிபணியாது. நுாறு ஆண்டுகளுக்கு முந்தைய செயல்பாடுகளால், இன்று நாம் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளோம்.


latest tamil news




கடந்த, 30 ஆண்டுகளில், அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வெளியிட்ட மாசுபாடு காரணமாக, உலகமே பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான கோபன்ஹேகன் ஒப்பந்தத்தில், ஆண்டுக்கு, 75 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க, பணக்கார நாடுகள் ஒப்புக் கொண்டன. ஆனால், இதுவரை, 1 ரூபாய் கூட வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-ஏப்-202117:54:49 IST Report Abuse
தமிழவேல் அதுக்கு நாமதான் மறு சுழற்சிக்கு ஏதாவது நடைமுறைப் படுத்தனும். பல நாடுகளில் நடக்கின்றதே ? ஊருசுத்திட்டு வந்தா மட்டும் போதாது. //பல லட்சம் டன் வைக்கோலை எரிந்து டெல்லியை புகை மண்டலமாக ஆக்குகிறார்கள்.//
Rate this:
Cancel
15-ஏப்-202117:35:16 IST Report Abuse
ஆப்பு இந்தியா எந்த நெருக்கடிக்கும் பணியாது. ஈரான் கிட்டேயிருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாதுன்னு அமெரிக்கா தடை போட்ட போது மட்டும் பணிஞ்சுது. 2015 ல பணிஞ்சது இன்னிவரை நிமிரல.
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
15-ஏப்-202116:19:29 IST Report Abuse
pradeesh parthasarathy இந்தியா எந்தவித நெருக்கடிக்கும் பணியாது ........... Russia விடமிருந்து S400 missile வாங்கக்கூடாது என்று அமெரிக்கா இந்தியா மீது வற்புறுத்தல் . இந்தியா அமெரிக்காவின் நெருக்கடிக்கு பணியுமா இல்லை நிமிர்ந்து நிற்குமா ...?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X