பொது செய்தி

இந்தியா

நெருக்கடிக்கு உள்ளாகி வரும் முதலீட்டாளர்கள் நம்பிக்கை

Updated : ஏப் 15, 2021 | Added : ஏப் 15, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த தரகு நிறுவனமான, 'கோல்டுமேன் சாக்ஸ்' கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததை அடுத்து, இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்பை குறைத்து அறிவித்துள்ளது. மேலும், முதலீட்டாளர்கள் நம்பிக்கையில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு ஆண்டில், 10.9 சதவீதமாக

புதுடில்லி : அமெரிக்காவைச் சேர்ந்த தரகு நிறுவனமான, 'கோல்டுமேன் சாக்ஸ்' கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததை அடுத்து, இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்பை குறைத்து அறிவித்துள்ளது. மேலும், முதலீட்டாளர்கள் நம்பிக்கையில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.latest tamil newsகோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு ஆண்டில், 10.9 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது, கொரோனா பரவல் அதிகரித்திருப்பதை அடுத்து, 10.5 சதவீதமாக இருக்கும் என, குறைத்து அறிவித்து உள்ளது. இது குறித்து , இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது: கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து, பல இடங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என, முதலீட்டாளர்கள் கவலை கொள்கிறார்கள். இந்த போக்கு, பொருளாதார மீட்சியை தாமதப்படுத்தும்.


latest tamil newsமுதலீட்டாளர்களின் மனப்போக்கு, பங்குச் சந்தைகளையும் பாதிப்பதாக இருக்கிறது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை, அதன் குறியீட்டு எண், நிப்டி, அதன் ஓராண்டு அதிகபட்ச நிலையிலிருந்து, 7 சதவீதம் சரிவைக் கண்டிருக்கிறது. பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் நம்பிக்கையில் ஒரு நெருக்கடி ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. இதன் தொடர்ச்சியாகவும், தடை உத்தரவுகள் காரணமாகவும் சந்தையில் சில துறை பங்குகள் மீது பாதிப்புகள் ஏற்படக்கூடும்.இவ்வாறு தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஏப்-202108:27:25 IST Report Abuse
theruvasagan சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதில்லை. பங்குச் சந்தை என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட சூதாட்டமே. சில்லறை முதலீட்டாளர்களுக்கு அது ஒரு பட்டுத்துணி போர்த்திய படுகுழி. வரைமுறைப் படுத்தப்பட்ட பணச்சந்தையில் வட்டி வருமானம் முதலீடு வருமானம் நியாயமான விகிதத்திலும் சீராகவும் கிடைத்தால் அன்னிய முதலீடுகளுக்கு நாக்கை தொங்கப்போட்டுக் கொண்டு அலையாமல் உள்நாட்டு சேமிப்பை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் எந்தப் பொருளாதாரப் புலியும் இதைக் கண்டுகொள்ளுவதே இல்லை. அதனால் தான் உள்நாட்டு சேமிப்பின் கணிசமான பகுதி உற்பத்திப் பெருக்கத்துக்கு உதவாத நிதியாக தங்கத்திலும் நிலத்திலும் முதலீடு செய்யப்பட்டு வீணாக முடங்கிக் கிடக்கிறது.
Rate this:
Cancel
15-ஏப்-202113:35:36 IST Report Abuse
ஆரூர் ரங் 2014 ஜனவரியில் காங்கிரஸ் விட்டுச்சென்ற போது🙃 NIFTY புள்ளி 6260 ஆக இருந்தது. சென்ற ஆண்டு COVID இருக்கும் போதே 8800 ஆகி இப்போது 14433 இல் உள்ளது👍. நோய் பரவால் உலகமே தத்தளிக்கும் இந்நேரத்தில் இது சாதனைதான். இப்போ சொல்லுங்க. முதலீட்டாளர்கள் வருத்தத்திலா இருக்கிறார்கள்? இந்த ஆட்சியில் சுமார் 130 சதவீததுக்கும் மேல் லாபம் . இதில் பங்குபெற்றவர்களில் 95 விழுக்காடு சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் . இன்சூரன்ஸ் பாலிசிதாரர்கள்
Rate this:
15-ஏப்-202115:23:29 IST Report Abuse
ஆப்பு2019 நடுவில் 8500 புள்ளிகளிலிருந்து ஒரு ஒண்ணரை வருஷத்தில் 14500 க்கு போயிருக்குன்னா அது வளர்ச்சி இல்லை. வீக்கம். சீக்கிரம் பலூன் காத்து போயி வீக்கம் வடிஞ்சிரும்....
Rate this:
Cancel
RAJAN - murasori,இந்தியா
15-ஏப்-202113:00:10 IST Report Abuse
RAJAN Last year in April i invested when the situation was the same as now.my friends told me i am taking risk.Got huge gain.Now its a best time to buy ,I am investing more,i am confident sensex will reach 55000 points in 2 year period
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X