பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பல இடங்களில் மழை: 17 க்கு பின் குறையும் என வானிலை மையம் அறிவிப்பு

Updated : ஏப் 15, 2021 | Added : ஏப் 15, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் அதிகாலை முதல் கனமழை பெய்தது.குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை : தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் அதிகாலை முதல் கனமழை பெய்தது.latest tamil newsகுமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பகலில் மிதமான மழை பெய்தது. இன்று அதிகாலை முதல் சென்னையில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.


மாவட்டங்களில் மழை

சென்னையில் ஈக்காட்டுதாங்கல், பம்மல், அடையாறு, கோட்டூர்புரம், பல்லாவரம், கிண்டி, வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்தது. மேலும் அசோக்நகர், தியாகராயநகர், மேற்குமாம்பலம், வடபழனி, கே.கே நகர், விருகம்பாக்கம், சித்தாலம்பாக்கம், கோடம்பாக்கம், சூளைமேடு, ராமாவரம், உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.


latest tamil newsசென்னையின் புறநகர் பகுதிகளான வண்டலூர், பெருங்களத்தூர் மற்றும் கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. சென்னையில் அடுத்த 3 மணிநேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

வேலூர் : வேலூர் , காட்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
மயிலாடுதுறை : சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், வைத்தீஸ்வரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மழை
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை, சோளிங்கர், வாலாஜாபேட்டை, ஆற்காடு மற்றும் அரக்கோணம் உள்ளிட்ட சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சேலம் : சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நள்ளிரவில் மழை பெய்தது.
கிருஷ்ணகிரி : போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

திருவண்ணாமலை : திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், வேட்டவலம் உள்ளிட்ட சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

திருவள்ளூர் : திருத்தணி மற்றும் பள்ளிபட்டு ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்தது.
வானிலை அறிக்கைசென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 17 ம் தேதி முதல் படிப்படியாக மழை குறையும். நாளை, நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
15-ஏப்-202115:27:54 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy மழை பொழிவது எடப்பாடியார் அரசுக்கு அறிகுறி
Rate this:
Cancel
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
15-ஏப்-202114:26:43 IST Report Abuse
padma rajan thank you sir. power supply has been restored now at 1:15 ...but dont know how long will continue.....
Rate this:
Cancel
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
15-ஏப்-202112:55:05 IST Report Abuse
padma rajan இந்த நேரம் வரை அதாவது மணி தற்போது 12:50 இன்னும் Cuபாent. வரவில்லை 9 மணி நேரம் ஆகியும். கொஞ்சம் விஜாரித்து உதவி செய்யுங்களேன் என்னதான் அவ்வளவு பெரிய FAULT என்பதை. இடம் நங்கநல்லூர் 18, 19, 20, 6வது தெருக்கள். EB அலுவலகம் 100 அடி சாலையில் உள்ளது Chakara மனத்துவ மனை அகில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X