பொது செய்தி

இந்தியா

பத்திரிகையாளர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை - கெஜ்ரிவால் கோரிக்கை

Updated : ஏப் 15, 2021 | Added : ஏப் 15, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புது டில்லி: பத்திரிகையாளர்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் செய்தி வழங்குகின்றனர். அவர்களை முன்கள பணியாளர்களாக கருதி தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா 2-ம் அலையின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

புது டில்லி: பத்திரிகையாளர்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் செய்தி வழங்குகின்றனர். அவர்களை முன்கள பணியாளர்களாக கருதி தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.



latest tamil news



நாடு முழுவதும் கொரோனா 2-ம் அலையின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை 11 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் 'ஸ்புட்டினிக் வி' உள்ளிட்ட வெளிநாட்டு தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி தந்துள்ளது மத்திய அரசு.


latest tamil news



இந்நிலையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "ஊடகவியலாளர்கள் மிகவும் மோசமான சூழ்நிலைகளிலிருந்து செய்தி தருகிறார்கள். அவர்களை முன்கள பணியாளர்களாக கருத வேண்டும். முன்னுரிமையின் அடிப்படையில் அவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக டில்லி அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. என கூறியுள்ளார். கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் பல்வேறு ஊடகவியலாளர்கள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru - Chennai,இந்தியா
15-ஏப்-202117:02:48 IST Report Abuse
Guru ஊடகவியலாளர்கள் தங்கள் இன்னுயிரை பணயம் வைத்து செய்தி சேகரிக்கின்றனர். அவர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானதே.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
15-ஏப்-202116:16:09 IST Report Abuse
M  Ramachandran இவர் ஆடம்பர விளம்பரக்காரனான். மக்களுக்காக என்ன செய்துள்ளார்? வெறுப்பு அரசியல்களை செய்பவர். இவரையும் ஒரு தலைவர என்று அண்ணா அசாரே போன்றவர்கள் முன்னுக்கு கொண்டுவந்ததினால் இன்று அவர் காணாமல் போனார். நிழலும் நிஜமும் முதலில் தெரியாது.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
15-ஏப்-202114:43:33 IST Report Abuse
M  Ramachandran இந்த ஆள் எப்படி அட்மினிஸ்டரேஷன் பதவிக்கு வந்தாரோ குழப்ப வாதி உடனுக்குடன் முடிவுஎடுக்க தெரியாதமனிதர். யாராவது ஒருவரின் காட்டலைக்கீழ் தான் இவர் இயங்க முடியும். சொந்த முடிவுகள் எடுக்க ( சுடாலின் போல்) முடியாத மனிதர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X