சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஒரு 100 ரூபாய் வைக்க மாட்டியா?'; துரைமுருகன் வீட்டில் எழுதிய திருடன்

Updated : ஏப் 15, 2021 | Added : ஏப் 15, 2021 | கருத்துகள் (155)
Share
Advertisement
திருப்பத்துார்: 'ஒரு நுாறு ரூபாய் கூட வைக்கலேன்னா, இவ்வளவு பெரிய பங்களா எதற்கு' என, துரைமுருகன் சொகுசு பங்களாவில் திருட வந்தவர்கள், தங்கள் ஆதங்கத்தை நோட்டிலும், சுவற்றிலும் எழுதி சென்றுள்ளனர்.தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகனுக்கு, திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரி மலை மஞ்சகொல்லையில், 25 ஏக்கரில், சொகுசு பங்களா உள்ளது. காவலாளி பிரேம்குமார், 45, வசிக்கிறார். கடந்த, 12ல்
திருடன், துரைமுருகன்,

திருப்பத்துார்: 'ஒரு நுாறு ரூபாய் கூட வைக்கலேன்னா, இவ்வளவு பெரிய பங்களா எதற்கு' என, துரைமுருகன் சொகுசு பங்களாவில் திருட வந்தவர்கள், தங்கள் ஆதங்கத்தை நோட்டிலும், சுவற்றிலும் எழுதி சென்றுள்ளனர்.

தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகனுக்கு, திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரி மலை மஞ்சகொல்லையில், 25 ஏக்கரில், சொகுசு பங்களா உள்ளது. காவலாளி பிரேம்குமார், 45, வசிக்கிறார். கடந்த, 12ல் பங்களா கதவை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, இரண்டு பீரோக்களை உடைத்துள்ளனர். எதுவும் சிக்காததால், 'சிசிடிவி ஹார்டு டிஸ்க்'கை எடுத்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்து, ஏலகிரிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், துரைமுருகனின் சொகுசு பங்களா சுவற்றில், 'ஒரு, 100 ரூபாய் கூட வைக்க மாட்டாயா' என, திருடர்கள் எழுதி வைத்துள்ளனர்.


latest tamil news


அத்துடன், அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில், 'ஒரு ரூபாய் கூட இல்ல; எடுக்கல' எனவும், '100 ரூபாய் கூட வைக்கலேன்னா, இவ்வளவு பெரிய பங்களா எதற்கு' எனவும், எழுதி வைத்து விட்டு சென்றது தெரிந்தது. மேலும், அவர்கள் ரம்மி விளையாடி, சீட்டு கட்டுகளை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். தனிப்படை போலீசார், துரைமுருகன் பங்களா அருகே உள்ள, மற்ற பங்களாக்களில் இருந்த, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்ததில், சம்பவத்தன்று காரில், 10 பேர் வந்து சென்றது தெரிந்தது.

வாணியம்பாடியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் பங்களாவிலும், அதே நாளில் திருடர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று, அங்கும் எதுவும் இல்லாததால், அங்கிருந்த குறிப்பு புத்தகத்திலும், சுவற்றிலும் இதே மாதிரி எழுதிச் சென்றது தெரிந்தது.'கையெழுத்தை வைத்து, அவர்களை பிடித்து விடுவோம்' என, போலீசார் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (155)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA - chennai,இந்தியா
21-ஏப்-202115:15:43 IST Report Abuse
SIVA டெம்போ எல்லாம் வைத்து திருட வந்து இருக்காங்க பாத்து போட்டு கொடுங்க
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
19-ஏப்-202119:57:33 IST Report Abuse
Jayvee எவன்கிட்ட? நீ ஜஸ்ட் திருடண்டா .. நாங்கெல்லாம்
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
19-ஏப்-202110:45:17 IST Report Abuse
N Annamalai அவன் எழுதி சென்றது தான் விஷயம் .அவன் அடுத்த மாதம் அரசு மாறினால் பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் எழுதி இருக்கலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X