உயிர்காக்கும் தடுப்பூசி போடுவதை திருவிழா என பெயர் சூட்டுவதா?: ஸ்டாலின் கண்டிப்பு

Updated : ஏப் 15, 2021 | Added : ஏப் 15, 2021 | கருத்துகள் (156) | |
Advertisement
சென்னை: உயிர்காக்கும் தடுப்பூசி போடுவதற்கு, திருவிழா என பெயர் சூட்டுவது கண்டிக்கத்தக்கது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நாட்டில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. இதையடுத்து, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஊக்கப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ‛திகா உத்சவ்' என்னும் தடுப்பூசி
DMK, Stalin, CovidVaccine, NEET, திமுக, ஸ்டாலின், தடுப்பூசி, திருவிழா,நீட் தேர்வு

சென்னை: உயிர்காக்கும் தடுப்பூசி போடுவதற்கு, திருவிழா என பெயர் சூட்டுவது கண்டிக்கத்தக்கது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. இதையடுத்து, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஊக்கப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ‛திகா உத்சவ்' என்னும் தடுப்பூசி திருவிழாவும் அரசு சார்பில் நடைபெற்றது. இதற்கிடையே கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக பல மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. தமிழக அரசும், கூடுதல் தடுப்பூசிகள் வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


latest tamil news


இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. தடுப்பூசிகள் உரிய நேரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வராதது, சுமார் 5.84 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது என பொறுப்பின்மையை பா.ஜ., அரசு காட்டிக் கொண்டிருக்கிறது. உயிர் காக்கம் தடுப்பூசி போடுவதை ‛திருவிழா' என பெயர் சூட்டி பிரதமர் மோடி தனது அரசின் நிர்வாகத் திறமையின்மையை திசை மாற்றுகிறார்.

தமிழகத்தில் இதுவரை 40.21 லட்சம் பேருக்கும் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. போடப்படும் தடுப்பூசியின் அடிப்படையில்தான் சப்ளை என்று மத்திய அரசு முடிவு எடுத்திருந்தால், அதை அதிமுக அரசு ஏன் எதிர்க்கவில்லை? தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதிமுக - பாஜ., அரசுகள் தோல்வியடைந்துவிட்டன. தமிழக மக்கள் அனைவரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்கி, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ஸ்டாலின் தனது மற்றொரு டுவிட்டில், ‛கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மரணமும் பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவர்கள் போராடி வருகின்றனர். கொரோனா அதிகரிக்கும் இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் அவசியம்தானா?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (156)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-202111:28:11 IST Report Abuse
Sriram V This is to awareness or it's called campaign. He is not able to understand even simple things how he can be CM of state
Rate this:
Cancel
karthika - chennai,இந்தியா
19-ஏப்-202104:12:14 IST Report Abuse
karthika முரட்டு குத்து விழான்னு வச்சிருந்த உதயநிதி முதல்ல ஓடி போயிருப்பான்..
Rate this:
Cancel
ponssasi - chennai,இந்தியா
17-ஏப்-202112:17:14 IST Report Abuse
ponssasi நான் நேற்று முன்தினம் DPI. இல் தடுப்புஊசி திருவிழா என்று செய்தி வந்தது, தடுப்பூசி செலுத்திக்கொள்ளல சென்றேன், அங்கு ஒருவரும் இல்லை, அங்கு பணியில் உள்ளவருக்கு யாவருக்கும் தெரியவில்லை, ஓமாந்தூரார் மருத்துவமனை கூட்டம் அதிகமாக இருக்கும் என கருதி சுற்றிஅலைந்து ஒரு தனியார் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டேன். இவர்கள் சொல்லுவதுபோல திருவிழா என்றல்லாம் ஒன்றும் இல்லை. சும்மா ஒரு விளம்பரம் அவ்வளவே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X