பொது செய்தி

இந்தியா

கும்பமேளா நடக்கும் ஹரித்வாரில் 2,167 பேருக்கு கொரோனா

Updated : ஏப் 15, 2021 | Added : ஏப் 15, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
ஹரித்வார்: கும்பமேளா நடந்து வரும் ஹரித்வாரில் கடந்த 5 நாட்களில் 2,167 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மஹா கும்பமேளா திருவிழா நடைபெறும். அதன்படி 2010-க்கு பிறகு இந்தாண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து கும்பமேளா விழா தொடங்கி பிரம்மாண்டமாக நடக்கிறது. அதே சமயம் கொரோனா இரண்டாம் அலை பரவல் நாடு முழுவதும் பாதிப்பை
haridwar, corona, coronavirus, covid19, kumbhmela, ஹரித்வார், கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19, கும்பமேளா,

ஹரித்வார்: கும்பமேளா நடந்து வரும் ஹரித்வாரில் கடந்த 5 நாட்களில் 2,167 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, மஹா கும்பமேளா திருவிழா நடைபெறும். அதன்படி 2010-க்கு பிறகு இந்தாண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து கும்பமேளா விழா தொடங்கி பிரம்மாண்டமாக நடக்கிறது. அதே சமயம் கொரோனா இரண்டாம் அலை பரவல் நாடு முழுவதும் பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. கும்பமேளாவில் பங்கேற்க கொரோனா இல்லை என்கிற சான்று வேண்டும். தனிநபர் இடைவெளி, முக்கவசம் போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஆனால் லட்சக்கணக்கில் பக்தர்கள் திரள்வதால் கூட்டத்தினரை சமாளிக்க முடியாத நிலை உள்ளது. இன்று கும்பமேளாவின் முக்கிய நாள் என்பதால் காலை முதல் பக்தர்கள், சாதுக்கள் உட்பட மிகப்பெரிய கூட்டத்தினர் கங்கையில் புனித நீராடி வருகின்றனர். கும்பமேளாவில் நேற்று (ஏப்.,14) மட்டும் சுமார் 14 லட்சம் பேர் புனித நீராடி உள்ளனர்.


latest tamil news


இந்நிலையில், கடந்த 10ம் தேதி முதல் இன்று(ஏப்.,15) வரை 2 லட்சத்து 36 ஆயிரத்து 751 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. அதில், 2,167 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.



உத்தர்கண்ட் மாநில அரசின் கட்டுப்பாட்டு அறை தகவலின்படி,
ஏப்., 10 ல் 254 பேருக்கும்,
ஏப்., 11ல் 386 பேருக்கும்,
ஏப்.,12ல் 408 பேருக்கும்
ஏப்.,13ல் 594 பேருக்கும்
ஏப்.,14ல் 525 பேருக்கும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manithan -  ( Posted via: Dinamalar Android App )
16-ஏப்-202110:40:57 IST Report Abuse
Manithan இதனால் ஓரு ஊர் அzhiya போகிறது... இதற்கு யார் பொறுப்பு?
Rate this:
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
16-ஏப்-202109:03:19 IST Report Abuse
G.Prabakaran சென்ற ஆண்டு கொரோனா வந்த போது டெல்லியில் கூடிய தப்ளிக் கூட்டத்தால் கொரோனா வந்தது என அவர்கள் மீது பழி போட்டோம்.
Rate this:
s.deepraj@gmail.com - chennai,இந்தியா
16-ஏப்-202112:02:39 IST Report Abuse
s.deepraj@gmail.comகரெக்ட் சார். இங்க அந்த புதுச்சேரி சந்திரன், ஓரி, அந்த ஆளுங்கள கமெண்ட் ஏரியா ல பாக்க முடியாது ....
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
16-ஏப்-202108:47:19 IST Report Abuse
J. G. Muthuraj இரண்டரை லட்சம் கொரானா மாதிரிகள் பரிசோதனையில் இரண்டாயிரதுக்கு மேல் கொரானா. கும்பமேளாவிற்கு வருகை தந்த பதினான்கு இலட்சம் பேர்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டால்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X