பொது செய்தி

இந்தியா

முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைப்பு: ஹர்ஷ்வர்த்தன் அறிவிப்பு

Updated : ஏப் 15, 2021 | Added : ஏப் 15, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் நுழைவு வரும் ஏப். 18-ல் நடத்த திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் தேர்வு தேதி ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் அதிகரித்து வரும் கெரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில்
முதுநிலை, நீட் தேர்வு ,ஒத்தி வைப்பு, ஹர்ஷ்வர்த்தன்

புதுடில்லி: முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் நுழைவு வரும் ஏப். 18-ல் நடத்த திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் தேர்வு தேதி ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கெரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.


latest tamil news



இதையடுத்து முதுநிலை நீடர் தேர்வு நடத்துவது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தனது டுவிட்டரில் கூறியது, இளம் மருத்துவ மாணவர்களின் நலன் கருதி ஏப்.18-ல் நடக்கவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesan - Masurai,இந்தியா
16-ஏப்-202106:55:41 IST Report Abuse
Ganesan நீட் தேர்வுகளை முன்னரே அறிவித்துவிட்டு கடைசி நேரத்தில் இவ்வாறு ஒத்திவைப்பது தேர்வுக்குத் தயாராக இருக்கின்ற மாணவர்களின் மனதை மிகவும் பாதிக்கும் செயலாகும். மேலும் பணச்செலவு மன உளைச்சல் என மாணவர்களுக்கு சங்கடத்தை உருவாக்கும் இச்செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும். நீட் தேர்வுக்கு திட்டமிடும் அதிகாரிகள் தூக்கத்திலிருந்து விழிக்கட்டும் இனியாவது.
Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
16-ஏப்-202117:24:08 IST Report Abuse
வந்தியதேவன்இதெல்லாம் மேலே இருக்குறவங்களுக்கு என்ன தெரியப்போகுது? ஆட்சி நடத்துவதை, “கோலிகுண்டு” விளையாட்டு மாதிரி நினைச்சுட்டாங்க. எதையும் சீரியஸாக எடுத்துக்குறதில்ல. அதை ஆதரிக்க “அரசியல் தற்குறிகளான” படித்த மேதாவிகள். அதோ பார் வெள்ளைக்காக்கா பறக்குது..ன்னு சொல்லிட்டிருக்கானுங்க.....
Rate this:
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
15-ஏப்-202122:05:46 IST Report Abuse
வந்தியதேவன் இங்க இருக்குற சங்கிமங்கிங்க... அல்லக்கைங்க... நொள்ளக்கைங்க...? பெரிசா பீத்திக்கிறாங்க... மத்திய அரசு மிக மிக திறமையான அரசு...ன்னு...? இந்திய தலைநகரம் டெல்லி ஓரமா இருக்குறதால... தென்னிந்தியாவுக்கு மாத்த முயன்ற முகமது பின் துக்ளக் மாதிரி... காமெடி பீசா இருக்குது இந்த ஆட்சி... இந்த நீட் தேர்வு நடைபெற வேண்டிய மாதம்... 2020 டிசம்பர்...? சரி.... கொரானா காலம்... அதுனால... கொரானா குறைஞ்ச காலமான ஜனவரி அல்லது பிப்ரவரி...ல வச்சிருக்கலாம்... அதுகூட வேணாமய்யா... மார்ச் முதல் வாரத்திலேயாவது வைத்திருக்கலாம்...? முகமது பின் துக்ளக்... மாதிரி... கொரனா ஏறுகின்ற நேரத்திலே... நடத்தியே தீருவோம்...னு தேர்வு எழுதுற டாக்டர்களுக்கு மெஸேஜ் அனுப்பி... அந்த ஹால் டிக்கெடுடனே... 17,18,19 ஆகிய மூன்று நாட்களுக்கு இ-பாஸ் இணைத்து அனுப்பி... இப்படியெல்லாம் அந்த மாணவர்களை உசுப்பேத்தி, உசுப்பேத்தி... நாளை மறுநாள் தேர்வு எனும்போது... ஒத்திவைப்பு...ன்னு காமெடி பண்ற இவங்கள என்னத்த சொல்றது...? இதுலந்தே இவங்ளோட நிர்வாகத் திறமை தெரியுது...? இதுல தினமலரும், அதுக்கு ஒத்து ஊதற அல்லக்கை, நொள்ளக்கை, சங்கிமங்கிகள் எல்லாம் வாழ்க... வாழ்க...ன்னு சொல்லி சொல்லியே... இந்த நாட்டையும், இந்த நாட்டு மக்களையும் அழிக்கணும்னு முடிவு பண்ணிட்டாங்க போலிருக்கே...?
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஏப்-202112:59:44 IST Report Abuse
தமிழவேல் மாஸ்க், சுகாதார பாதுகாப்புகள் எதுவுமே இல்லாம, தேர்தல்ங்ர பேருல கூட்டத்தை கூட்டுன சமயத்திலயாவது இந்த தேர்வையும் செய்திருக்கலாமே......
Rate this:
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
15-ஏப்-202121:52:09 IST Report Abuse
வந்தியதேவன் ‛கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மரணமும் பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவர்கள் போராடி வருகின்றனர். கொரோனா அதிகரிக்கும் இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் அவசியம்தானா?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X