எஞ்சிய நான்கு கட்ட தேர்தல்கள்: தேர்தல் கமிஷனுக்கு மம்தா புது யோசனை| Dinamalar

எஞ்சிய நான்கு கட்ட தேர்தல்கள்: தேர்தல் கமிஷனுக்கு மம்தா புது யோசனை

Updated : ஏப் 15, 2021 | Added : ஏப் 15, 2021 | கருத்துகள் (37)
Share
கோல்கட்டா: மேற்குவங்கத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக எஞ்சியுள்ள நான்கு கட்டதேர்தல்களை சேர்த்து ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். இம்மாநில சட்டசபை தேர்தல், கடந்த மாதம் 27ல் துவங்கி, இம்மாதம் ஏப்.29 வரை, எட்டு கட்டங்களாக நடக்கிறது. இதில் கடந்த ஏப். 10-ம் தேதியுடன் நான்காம் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
நான்கு கட்ட தேர்தல்கள்: தேர்தல் கமின்,மம்தா  யோசனை

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக எஞ்சியுள்ள நான்கு கட்டதேர்தல்களை சேர்த்து ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

இம்மாநில சட்டசபை தேர்தல், கடந்த மாதம் 27ல் துவங்கி, இம்மாதம் ஏப்.29 வரை, எட்டு கட்டங்களாக நடக்கிறது. இதில் கடந்த ஏப். 10-ம் தேதியுடன் நான்காம் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்னும் நான்கு கட்ட தேர்தல்கள் நடக்கவுள்ளது.இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.


இந்த சூழ்நிலையில் ஆளும் திரிணாமுல் காங். முதல்வர் மம்தா பானர்ஜி டுவிட்டரில் கூறியது,
தற்போதைய சூழ்நிலையில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. தொற்று பரவல் மேலும் அதிகாரித்தால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே மக்களின் நலன் கருதி எஞ்சியுள்ள நான்கு கட்ட தேர்தல்களை ஒரே கட்டமாக சேர்த்து ஒரே தேதியில் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மம்தா டுவிட்டரில் வலியுறுத்தியுள்ளார்.


latest tamil news






Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X