பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஏப் 15, 2021
Share
Advertisement
ஏப்., 16, 2013திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில், 1913 அக்., 2ம் தேதி பிறந்தவர், எல்.கே.பி.லகுமையா. இளம் வயதிலேயே, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். காந்தியவாதியான இவர், பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.கடந்த, 1946ல், காந்தி சென்ற ரயிலை மறித்து, அவரின் காலடி, சின்னாளப்பட்டியில் பதிய, காரணமாக இருந்தார்.சுதந்திரத்திற்கு பின், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சமூகப்



இதே நாளில் அன்று


ஏப்., 16, 2013



திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில், 1913 அக்., 2ம் தேதி பிறந்தவர், எல்.கே.பி.லகுமையா. இளம் வயதிலேயே, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். காந்தியவாதியான இவர், பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.கடந்த, 1946ல், காந்தி சென்ற ரயிலை மறித்து, அவரின் காலடி, சின்னாளப்பட்டியில் பதிய, காரணமாக இருந்தார்.சுதந்திரத்திற்கு பின், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சமூகப் பணியாற்றினார். சின்னாளப்பட்டி பேரூராட்சியின் தலைவராகவும், காந்தி கிராம நிறுவனத்தின் அறங்காவலர்
குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.கடந்த, 1947ல், சமூக சேவை நிறுவனத்திற்காக, சின்னாளப்பட்டி அருகில், தன், 25 ஏக்கர் நிலத்தை தானமாக அளித்தார். அதில் துவக்கப்பட்டவை தான், காந்தி கிராம அறக்கட்டளை, காந்தி கிராம பல்கலை, கஸ்துாரிபா மருத்துவமனை ஆகியவை. 2013 ஏப்., 16ம் தேதி, தன், 100வது வயதில் இயற்கை எய்தினார்.தியாகி எல்.கே.பி.லகுமையா, காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X