'இஸ்ரோ' விஞ்ஞானி வழக்கு சி.பி.ஐ.,க்கு கோர்ட் உத்தரவு

Added : ஏப் 15, 2021
Share
Advertisement
புதுடில்லி:'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தொடர்பான வழக்கில், தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் பற்றி தொடர்ந்து விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இழப்பீடு இஸ்ரோவின் முக்கியமான ராக்கெட் தொழில்நுட்பத்தை, வெளிநாட்டிற்கு விற்க முயன்றதாக, 1994ல், கேரளாவில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக, இஸ்ரோ
 'இஸ்ரோ' விஞ்ஞானி வழக்கு சி.பி.ஐ.,க்கு கோர்ட் உத்தரவு

புதுடில்லி:'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தொடர்பான வழக்கில், தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் பற்றி தொடர்ந்து விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இழப்பீடு



இஸ்ரோவின் முக்கியமான ராக்கெட் தொழில்நுட்பத்தை, வெளிநாட்டிற்கு விற்க முயன்றதாக, 1994ல், கேரளாவில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக, இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது. 'நம்பி நாராயணன் குற்றமற்றவர்' என நீதிமன்றத்தில் தெரிவித்தது. அவருக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தவறு செய்த போலீஸ் அதிகாரிகளை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யவும், குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு, அதன் இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:


விசாரணை

போலீஸ் அதிகாரிகள் மீதான புகாரை விசாரித்த, மூன்று பேர் குழுவின் அறிக்கை, மிகவும் ரகசியமானது; அதை வெளியிட முடியாது. இந்த அறிக்கையை, சி.பி.ஐ.,யிடம் வழங்க உத்தரவிடப்படுகிறது. இந்த அறிக்கையை, முதல் கட்ட விசாரணையாக கருதி, தவறிழைத்த போலீஸ் அதிகாரிகள் குறித்து தொடர்ந்து விசாரித்து, மூன்று மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய, சி.பி.ஐ.,க்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X