பொது செய்தி

இந்தியா

வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு 3 நாட்களில் அனுமதி

Updated : ஏப் 17, 2021 | Added : ஏப் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி :'வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியை, நம் நாட்டின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் மனு மீது, ஒழுங்குமுறை அமைப்புகள் மூன்று நாட்களில் முடிவு அறிவிக்கும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.நாடு முழுதும், கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள,
Foreign produced, COVID 19 vaccines, corona vaccine, வெளிநாடு தடுப்பூசிகள, அனுமதி

புதுடில்லி :'வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியை, நம் நாட்டின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் மனு மீது, ஒழுங்குமுறை அமைப்புகள் மூன்று நாட்களில் முடிவு அறிவிக்கும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுதும், கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள, 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின்' ஆகிய தடுப்பூசிகளை போடும் பணியை, மத்திய - மாநில அரசுகள் துரிதப்படுத்தியுள்ளன.

மேலும், உலக சுகாதார அமைப்பினரின் அவசர கால பயன்பாட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ள, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கும் வழிமுறைகளை விரைவுபடுத்தவும், மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்தது.

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பூசியை, அவசர கால பயன்பாட்டுக்காக அனுமதி கோரும் விண்ணப்பங்களை, மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு பரிசீலித்து, அனுமதி வழங்கி வருகிறது.வெளிநாட்டு தடுப்பூசியை, நம் நாட்டில் பயன்படுத்துவதற்கான அனுமதியைப் பெற, ஏற்கனவே எந்த கால வரையறையும் இல்லை. நாள் கணக்கில், மாதக் கணக்கில் கூட, அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.

இந்நிலையில், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளை, நம் நாட்டில் பயன்படுத்துவதற்கான புதிய ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது; அதன் விபரம்:

கொரோனா தடுப்பூசிகளுக்கான அவசர கால பயன்பாட்டுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், தங்கள் இந்திய துணை நிறுவனங்கள் அல்லது முகவர்கள் வாயிலாக, மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.இந்த விண்ணப்பங்கள் மீது, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, மூன்று வேலை நாட்களில் தங்கள் முடிவை அறிவிக்கும்.

அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டதும், தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளை பின்பற்றி, தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கப்படும். முதலில், 100 பயனாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்படும். அந்த, 100 பயனாளர்களையும் தடுப்பூசி நிறுவனங்கள், ஏழு நாட்களுக்கு கண்காணிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் பாதிப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்த விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இதை, மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு ஆய்வு செய்த பின், அடுத்த கட்ட பரிசோதனைகளுக்கான அனுமதியை வழங்கும். இந்த அனுமதி வழங்கப்பட்ட ஏழு நாட்களுக்குள், நிபுணர்கள் கமிட்டியினரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பின், அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


'தடுப்பூசி தயாரிப்பை அதிகரிக்க வேண்டும்!'


உலக வர்த்தக நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் பேசியதாவது:கொரோனா தடுப்பூசி மட்டுமல்லாது, சிகிச்சை மற்றும் நோய் கண்டறியும் மருத்துவ பொருட்களின் தயாரிப்பையும், சர்வதேச அளவில் அதிகரிக்கும் சூழலில் அனைத்து நாடுகளும் உள்ளன. இதற்கு முட்டுக்கட்டை போடும் பல்வேறு தடைகளையும் உடைத்தெறிய வேண்டும். அறிவுசார் சொத்து பாதுகாப்பு உள்ளிட்ட சட்ட திட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X