பொது செய்தி

இந்தியா

கொரோனாவால் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு பாதிப்பு

Updated : ஏப் 17, 2021 | Added : ஏப் 15, 2021 | கருத்துகள் (1+ 9)
Share
Advertisement
புதுடில்லி :நம் நாட்டில், கடந்த, 24 மணி நேரத்தில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை, நேற்று வெளியிட்ட அறிக்கை:கடந்த, 24 மணி நேரத்தில், இரண்டு லட்சத்து, 739 பேர், கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, 40 லட்சத்து, 74
கொரோனா,ஒரே நாள், 2 லட்சம் , பாதிப்பு

புதுடில்லி :நம் நாட்டில், கடந்த, 24 மணி நேரத்தில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, மத்திய சுகாதாரத் துறை, நேற்று வெளியிட்ட அறிக்கை:கடந்த, 24 மணி நேரத்தில், இரண்டு லட்சத்து, 739 பேர், கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, 40 லட்சத்து, 74 ஆயிரத்து, 564 ஆக உயர்ந்துள்ளது.

இதில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை, 14 லட்சத்து, 71 ஆயிரத்து, 877 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரே நாளில், 93 ஆயிரத்து, 528 பேர், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். இதையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, 24 லட்சத்து, 29 ஆயிரத்து, 564 ஆக உயர்ந்துள்ளது.கடந்த, 24 மணி நேரத்தில், கொரோனா வைரசால், 1,038 பேர் உயிரிழந்தனர். இதில், அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில், 278 பேர் பலியாகினர்.

சத்தீஸ்கரில், 120; டில்லியில், 104; குஜராத்தில், 73; உத்தர பிரதேசத்தில், 67; பஞ்சாபில், 63; மத்திய பிரதேசத்தில், 51 உயிரிழப்புகளும் பதிவாகின.இதையடுத்து, நாட்டில் பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 73 ஆயிரத்து, 123 ஆக உயர்ந்துள்ளது. எனினும், இறப்பு விகிதம், 1.23 சதவீதமாக குறைந்து காணப்படுகிறது. உயிரிழந்தோரில், 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், வேறு சில நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டோர் ஆவர்.
ஒரே நாளில், 13.84 லட்சம் பேருக்கு, கொரோனாவுக்கான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை, 26.20 கோடி பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, இரண்டு லட்சத்தை கடந்து பதிவாகி இருப்பது, இதுவே முதன்முறை.


10 மாநிலங்களில் அதிகம்



கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த, 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட, இரண்டு லட்சம் பேரில், 80.76 சதவீதம் பேர், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டில்லி, சத்தீஸ்கர், கர்நாடகா, மத்திய பிரதேசம், கேரளா, தமிழகம், குஜத் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட, 10 மாநிலங்களைச் சேர்ந்தோர். இதில், அதிகபட்சமாக மஹா.,வில் மட்டும், 58 ஆயிரத்து, 952 பேர் பாதிக்கப்பட்டனர்.


1 கோடி 'டோஸ்' தடுபபூசி



நம் நாட்டில், கடந்த, 11ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை, தடுப்பூசி செலுத்தும் திருவிழா நடந்தது. இந்நிலையில், அந்த நான்கு நாட்களில், தடுப்பூசி செலுத்தப்பட்டோர் விபரங்கள், தற்போது வெளியாகி உள்ளன. இதன்படி, அந்த நாட்களில், ஒரு கோடியே, 28 லட்சத்து, 98 ஆயிரத்து, 314, 'டோஸ்'கள், மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. இதில், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் மட்டும், ஒரு கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1+ 9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajakumar - singapore,சிங்கப்பூர்
16-ஏப்-202109:14:20 IST Report Abuse
Rajakumar கொரோனா தொற்று பாதிப்பை காட்டிலும் மோடிக்கு மேற்குவங்க தேர்தல்தான் பிரச்சாரம் மிகக மிக முக்கியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X