பொது செய்தி

இந்தியா

ஒரே நேரத்தில் தேர்தல்? தேர்தல் ஆணையம் மறுப்பு!

Updated : ஏப் 15, 2021 | Added : ஏப் 15, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி:'கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் வைத்து, மேற்கு வங்கத்தில் எஞ்சியுள்ள தொகுதிகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை' என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேற்கு வங்கத்தில், 294 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது.இதுவரை, நான்கு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், ஐந்தாம் கட்ட
ஒரே நேரம், தேர்தல்? தேர்தல் ஆணையம் ,

புதுடில்லி:'கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் வைத்து, மேற்கு வங்கத்தில் எஞ்சியுள்ள தொகுதிகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை' என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில், 294 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது.இதுவரை, நான்கு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், ஐந்தாம் கட்ட ஓட்டுப்பதிவு, நாளை நடக்கிறது. இதற்கிடையே, தீவிர தேர்தல் பிரசாரங்களில், அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


latest tamil news




கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரசார பேரணிகள் நடந்து வருவதால், வைரஸ் பரவல் வேகமெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதற்கிடையே, வைரஸ் பரவலை கருத்தில் வைத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவை, ஒரே நேரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகின.
இந்த வதந்திகளுக்கு தேர்தல் ஆணையம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், 'மேற்கு வங்கத்தில் எஞ்சியுள்ள தொகுதிகளுக்கான தேர்தலை சேர்த்து, ஒரே நேரத்தில் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
16-ஏப்-202115:11:27 IST Report Abuse
Sridhar ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் அரசு வன்முறையை கட்டுப்படுத்த முடியாது. அப்போது ரௌடிகள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை ஏற்படும். யார் கட்சியில் ரௌடிகள் நிறைய இருக்கிறார்களோ அவர்கள் இதை மிகவும் விரும்புவார்கள். இதற்க்கு மாறாக, நேரடி பிரச்சாரத்தை தடை செய்யலாம். அரசியல்வாதிகள் சொல்ல நினைப்பதை ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரிவித்தால் போதுமே? ஆனால், நேரடியாக மக்களை சந்தித்து மிரட்டி வோட்டு சேகரிக்கும் சில கட்சிகள் இதற்க்கு ஒப்புக்கொள்ளாது.
Rate this:
Cancel
nalam virumbi - aanadhapur,இந்தியா
16-ஏப்-202107:59:22 IST Report Abuse
nalam virumbi என்னங்க இப்படி வெறியாட்டத்துக்கு ஆப்பு வச்சிடீங்க. போங்க ரொம்ப மோசம்.
Rate this:
Cancel
nalam virumbi - aanadhapur,இந்தியா
16-ஏப்-202107:56:37 IST Report Abuse
nalam virumbi தமிழ்நாட்டை போல் ஒரே கட்டமாக கொரானாவை பரப்பும் தமிழக அரசியல்வாதிகளின் பொறுப்புணர்ச்சி மேற்க்கு வங்கத்தில் இல்லை என தெரிகிறது. தினமும் காலையில் ஒருமணி நேரமும், இரவில் ஒருமணிநேரமும் கால்கடடு மேக்கப் போடசெலவழிக்க வேண்டியுள்ளது. மீதமுள்ள அடுத்த கட்ட தேர்தலுக்கு வீல்சேரிலேயே டிரிப்ஸ் பாட்டிலுடன் பிராசாரத்திற்க்கு சென்றால் இன்னும் அனுதாபம் பெறலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X