பொது செய்தி

இந்தியா

டில்லி அணியை வீழ்த்தி ராஜஸ்தான் 'த்ரில்' வெற்றி

Updated : ஏப் 15, 2021 | Added : ஏப் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை: டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியாவில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மும்பையில் நடந்த லீக் போட்டியில் டில்லி, ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், பீல்டிங் தேர்வு செய்தார்.டில்லி அணிக்கு ஷிகர் தவான்(9), பிரித்வி ஷா(2) ஜோடி மோசமான துவக்கம்
IPL 2021, RR vs DC, Rajasthan Royals, Delhi Capitals

மும்பை: டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மும்பையில் நடந்த லீக் போட்டியில் டில்லி, ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், பீல்டிங் தேர்வு செய்தார்.

டில்லி அணிக்கு ஷிகர் தவான்(9), பிரித்வி ஷா(2) ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. ரகானேவும்(8), ஸ்டாய்னிஸ்(0) நிலைக்கவில்லை. டிவாட்டியா ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த ரிஷாப் பன்ட், 51 ரன் எடுத்து திரும்பினார். லலித் யாதவ்(20), டாம் கர்ரான்(21), அஷ்வின் (7) நீடிக்கவில்லை. டில்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது. வோக்ஸ் (15), ரபாடா (9) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி சார்பில் உனத்கட் 3, முஸ்தபிஜுர் 2 விக்கெட் சாய்த்தனர்.


latest tamil news


ராஜஸ்தான் அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. மனன் வோரா (9), பட்லர் (2), சாம்சன் (4), ஷிவம் துபே (2) என, 'டாப் ஆர்டர்' வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் திரும்பினர். ரியான் பராக் (2) கைவிட, டிவாட்டியா 19 ரன் எடுத்தார். மில்லர், 62 ரன் எடுத்து உதவினார். டாம் கர்ரான் வீசிய கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 12 ரன் தேவைப்பட்டன.

முதல் பந்தில் 2 ரன் எடுத்த மோரிஸ், அடுத்த பந்தில் சிக்சர் விளாசினார். 3வது பந்தில் ரன் இல்லை. 4வது பந்தில் மோரிஸ் மீண்டும் சிக்சர் அடிக்க, ராஜஸ்தான் அணி 19.4 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மோரிஸ் (36), உனத்கட் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
who cares -  ( Posted via: Dinamalar Android App )
15-ஏப்-202123:56:43 IST Report Abuse
who cares in the wildfire of corona at the back door..losing thousands of lives...losing jobs...losing bread and butter for millions..falling for the mercy of GOD........damn do v still need this at this very moment of life. KillIPL2021#
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X