இந்தியா

நீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்

Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி:'நீதிபதிகள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை பொய்யாக உள்ளன' என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.'உயர் நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளை நியமித்து தேங்கியுள்ள வழக்குகளில் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்' எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே
 நீதிபதிகள் , பொய் புகார், கண்டனம்

புதுடில்லி:'நீதிபதிகள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை பொய்யாக உள்ளன' என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

'உயர் நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளை நியமித்து தேங்கியுள்ள வழக்குகளில் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்' எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று நடந்தது.


latest tamil news




மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறுகையில் ''ஓய்வு பெற்ற நீதிபதிகளை குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிக நீதிபதிகளாக நியமித்து வழக்குகளை விசாரிக்க வைக்கலாம்'' என்றார்.இதற்கு பதில் அளித்து நீதிபதிகள் கூறியதாவது:தற்காலிக நீதிபதிகளாக செயல்படுவதை ஓய்வு பெற்ற நீதிபதிகளில் பெரும்பாலோர் விரும்புவதில்லை. அவர்கள் மத்தியஸ்த வழக்குகளில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். எனினும் இது பற்றி அவர்களிடம் ஆலோசிக்கப்படும்.

நீதிபதிகள் பணிக்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் நீதிபதிகள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் பலவும் பொய் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.அதிலும் தற்காலிக நீதிபதிகளுக்கு பணிபாதுகாப்பு எதுவும் இல்லை. அதனால் தற்காலிக நீதிபதிகள் பணிகாலத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivak - Chennai,இந்தியா
16-ஏப்-202113:35:08 IST Report Abuse
Sivak என்னது நீதிபதிகள் மீது புகார் சொன்னா அது பொய் புகார் ... அதுவே பொதுமக்கள் மீது சொன்னா அது கரெக்ட் ... என்னங்கடா உங்க நியாயம் ... 90% நீதிபதிகள் ஊழல் பேர்வழிகள்தான் ... இவர்கள் மேல் வருமான வரி சோதனை நடத்தியதா கேள்விபடலையே
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
16-ஏப்-202112:55:16 IST Report Abuse
S.Ganesan பல நீதிபதிகள் எப்போது அரசியல் கட்சிகளை சார்ந்து தீர்ப்பு கொடுப்பதும் ,வாய்தா வழங்குவதுமாக மாறி விட்டார்களோ , அப்போதிருந்து நீதிபதிகளின் மேல் உள்ள புகார்களும் அதிகரித்து விட்டன
Rate this:
Cancel
karuppasamy - chennai,இந்தியா
16-ஏப்-202111:23:52 IST Report Abuse
karuppasamy கடவுளுக்கு பயந்து நடக்கவேண்டாம். மனசாட்சிக்கு பயந்து நடங்கள் . கடவுளை கும்பிடுபவன்தான் பெரிய அயோக்கியனாக இருக்கிறான், இதுதான் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X