அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: கருத்துக் கணிப்பு தமிழகத்தில் எடுபடாது!

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (102)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :ஆர்.நாராயணசாமி, பெண்ணாடம், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகளில், கட்சி சார்பான நபர்களே கருத்து சொல்கின்றனர். கருத்துக் கணிப்பு எடுக்கும் அமைப்பும், ஏதேனும் ஒரு கட்சி சார்பானதாகவே இருக்கிறது. இதனால் தான், தமிழகத்தில் எடுக்கப்படும்
TN elections 2021, ADMK, DMK


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :


ஆர்.நாராயணசாமி, பெண்ணாடம், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகளில், கட்சி சார்பான நபர்களே கருத்து சொல்கின்றனர். கருத்துக் கணிப்பு எடுக்கும் அமைப்பும், ஏதேனும் ஒரு கட்சி சார்பானதாகவே இருக்கிறது. இதனால் தான், தமிழகத்தில் எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் பலிப்பது இல்லை.

பொதுமக்கள் அவ்வளவு எளிதாக, தங்கள் ஓட்டு யாருக்கு என, வெளியில் சொல்ல மாட்டார்கள். குறிப்பாக, கிராமப் புற பெண்களிடம், அவ்வளவு எளிதில், அவர்களின் ஆதரவு யாருக்கு என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. கிராமத்தில், கட்சி நிர்வாகிகள் வீட்டில் மட்டும் தான், சின்னம், கட்சிக்கொடி, தலைவரின் படங்களை காண முடியும்; மற்ற வீடுகளில், அப்படி ஏதும் இருக்காது.


latest tamil news


அரசியல் விஷயத்தில், கிராம மக்களிடம் விழிப்புணர்வு உள்ளது. அதனால் தான், அதிகளவில் அவர்கள் ஓட்டுப்பதிவு செய்கின்றனர். யார் வந்து ஓட்டுக் கேட்டாலும், பணம் கொடுத்தாலும், 'கட்டாயம், உங்களுக்கு ஓட்டுப் போடுகிறோம்' என்பர்; ஆனால், தம் விருப்பத்திற்கு ஏற்ப தான், ஓட்டுப் போடுவர்.

தமிழகத்தை பொறுத்தவரையில், கருத்துக் கணிப்பு எடுப்பது என்பது, மிக கடினமான காரியம். அது, சரியானதாக இருப்பதும் இல்லை.இந்த விஷயம் நன்கு தெரிந்ததால் தான், அரசியல் கட்சி தலைவர்கள், கருத்துக் கணிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

Advertisement
வாசகர் கருத்து (102)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-ஏப்-202113:44:06 IST Report Abuse
Malick Raja மே இரண்டு வரை மூடிக்கிட்டு அவரவர் வேலைகளை செய்வது அறிவார்ந்த நிலைக்கு அளவீடு ..
Rate this:
Cancel
ravi - coimbatore,இந்தியா
17-ஏப்-202112:09:48 IST Report Abuse
ravi DMK will gets 168 seats in TAN assembly 2021... WAIT and WATCH....
Rate this:
Ramona - london,யுனைடெட் கிங்டம்
19-ஏப்-202118:52:59 IST Report Abuse
Ramona எங்க மீதி சீட் என்ன பாவம் பண்ணிச்சு, அதயும் சேர்த்து க்கலாமே , அப்போ மொத்தமா தமிழ் நாடு ஒரே குடும்பம் ஆகிடும்...
Rate this:
Cancel
M.Selvam - Chennai/India,இந்தியா
17-ஏப்-202102:41:50 IST Report Abuse
M.Selvam ஆமா ஆமா எங்களுக்கு பிடிக்கிற மாதிரி போடலை என்றால் நம்பவே மாட்டோம்..நாங்கள் ஊழல் மற்றும் அரை வேக்காடு கூட்டத்தை நம்புவோம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X