பொது செய்தி

இந்தியா

ராமர் கோவில் நன்கொடை: 15 ஆயிரம் காசோலை திரும்பின

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
அயோத்தி : அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, விஸ்வ ஹிந்து பரிஷ் வசூலித்த, 22 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 ஆயிரம் காசோலைகள் பல்வேறு காரணங்களால் திரும்பிவிட்டன.உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டது.இதுவரை, 5,000 கோடி ரூபாய் வசூலானதாக கூறப்படுகிறது. இறுதி தொகை,
ayodhya, ram temple, cheques bounce, donation

அயோத்தி : அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, விஸ்வ ஹிந்து பரிஷ் வசூலித்த, 22 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 ஆயிரம் காசோலைகள் பல்வேறு காரணங்களால் திரும்பிவிட்டன.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில், நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டது.இதுவரை, 5,000 கோடி ரூபாய் வசூலானதாக கூறப்படுகிறது. இறுதி தொகை, அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், வங்கி காசோலைகளாக வசூலிக்கப்பட்ட, 15 ஆயிரம் காசோலைகள், கணக்கில் பணம் இல்லாதது உட்பட, பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக திரும்ப வந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காசோலைகளின் மதிப்பு, 22 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதில், 2,000 காசோலைகள் அயோத்தியில் பெறப்பட்டவை என கூறப்படுகிறது.


latest tamil newsதொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக திரும்பி வந்த காசோலைகளை, திரும்ப வங்கியில் செலுத்தவும் திட்டமிடப்பட்டு வருவதாக, ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷே த்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
16-ஏப்-202119:57:49 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN டீம்கா பிரமுகர்கள் கொடுத்த காசோலைகளாக இருக்கலாம்
Rate this:
Cancel
தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,இந்தியா
16-ஏப்-202113:08:46 IST Report Abuse
 தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. அது சரி 2014 இல்லேயே நீங்கள் கார்சேவா என்று வசூலித்த பணம் எங்கே அதை வங்கியில் DEPOSIT செய்து இருந்தா அந்த வட்டியில் மட்டுமே கோயில் கடலாமே பின்னர் ஏன் இப்படி உண்டியல் தூக்கணும், ஏன் JAYA கூட கார்சேவா என்று அனுப்பினார், பாவிகள் என்ன செய்தார்களோ இப்படி வசூலிக்கிறார்கள்
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஏப்-202116:52:33 IST Report Abuse
தமிழவேல் மத சம்பந்தமாக எது கட்டினாலும், அரசாங்கத்தின் பணத்தில் செலவழிப்பதைவிட, மக்களின் பணத்தில் கட்டுவதே நல்லது....
Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
16-ஏப்-202117:31:58 IST Report Abuse
வந்தியதேவன்///கார்சேவா/// அடப்பாவிங்களா...? கர்சேவா...ங்கற பேர்ல... செங்கல், செங்கல்லா ரயில்ல ஏத்தி அனுப்பிச்சாங்களே... இந்தியா முழுவதுமிலிருந்து... அது எங்கய்யா... கிட்டதட்ட பல கோடி செங்கல்... எங்கய்யா...? வடிவேல் காமெடி மாதிரி “கிணத்தக் காணோம்... கிணறு வெட்டின ரசீது இருக்கு... கிணத்த காணோம்”ங்ற கதையா அடிச்சுட்டீங்களா...? இதுல வேறே... இந்த கும்பலுக்கு வெகுளி, ஆனந்த் போன்ற சங்கிக சப்போர்ட்... ஆமா, அத்வானி இருந்தப்பதானே இதுமாதிரி செங்க கல்ல ஆட்டய போட்டானுங்க இந்த காவி கும்பலு...? நான்கூட செங்க கல்லு கொடுத்தேன்... அது ரசீது எங்கிட்ட இருக்கு... “செங்க கல் கொடுத்த ரசீது இருக்கு... ராமர் கோவில் எங்கய்யா...?”... அப்படீன்னு வடிவேல் மாதிரி கேக்கணும் போலிருக்கே... எவ்வளவு பெரிய யோக்கியனுங்க பாரு...?...
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
16-ஏப்-202110:47:46 IST Report Abuse
ram நிறைய கிரிப்டோ வேங்கடகிருஷ்ணன் போல, இதைபோல் நபர்கள்தான் ஹிந்து அறமற்ற துறையில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள், ஆட்களே இல்லாத இடத்தில ஏகப்பட்ட சர்ச் கட்டியிருக்கிறார்களே, அப்போது அந்த இடத்தில எல்லாம் வறுமை ஒளிந்து விட்டதா,
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஏப்-202113:08:10 IST Report Abuse
தமிழவேல் இதுவெல்லாம், இதற்கு வெளியே இருப்பவர்களின் வசதிக்கு அல்ல....
Rate this:
16-ஏப்-202113:24:59 IST Report Abuse
ஸ்டாலின் ::ஏன் காசில்லா பக்தனுக்கு தூரத்திலும், காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா இது என்ன நியாயம் ? இறைவன் கல கலகல வென சிரித்தான் இறைவன், தாயிற் சிறந்ததோர் கோயில் இல்லை என்றேன், நீங்கள் வணங்கவில்லை, தந்தை சொல் மிக மந்திரம் இல்லை என்றேன் நீங்கள் மதிக்கவில்லை, "" தூணிலும் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன், நீங்கள் நம்பவில்லை,"" ஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன் "" நீங்கள் செய்யவில்லை, எனக்கான இடத்தை, எனக்கான நேரத்தை எனக்கான விழாக்களை, மட்றும் என்னை வணங்கும் முறையை எல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள்.. இப்போது எனக்கு கட்டணத்தையும் வைத்து என்னை காட்சி பொருளாக்கி விட்டு என்னையே கேட்பது என்ன நியாயம் என்றான் இறைவன் ....
Rate this:
தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,இந்தியா
16-ஏப்-202113:37:32 IST Report Abuse
 தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது.ஹா ஹா அருமை நண்பரே...
Rate this:
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X