பொது செய்தி

இந்தியா

பொதுத் துறை பங்குகள்: மத்திய அரசு விற்பனை

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி; மத்திய அரசு, தன் வசம் இருக்கும், என்.எப்.எல்., என அழைக்கப்படும், 'நேஷனல் பெர்ட்டிலைசர்ஸ் லிமிடெட்' நிறுவனத்தின் பங்குகளில், 20 சதவீதத்தை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.மேலும், ஆர்.சி.எப்., எனும், 'ராஷ்ட்ரியா கெமிக்கல்ஸ் அண்டு பெர்ட்டிலைசர்ஸ்' நிறுவனத்தின், 10 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.இந்த இரண்டு நிறுவனங்களின் பங்குகளையும், இந்த
rcf, nfl, privatisation

புதுடில்லி; மத்திய அரசு, தன் வசம் இருக்கும், என்.எப்.எல்., என அழைக்கப்படும், 'நேஷனல் பெர்ட்டிலைசர்ஸ் லிமிடெட்' நிறுவனத்தின் பங்குகளில், 20 சதவீதத்தை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

மேலும், ஆர்.சி.எப்., எனும், 'ராஷ்ட்ரியா கெமிக்கல்ஸ் அண்டு பெர்ட்டிலைசர்ஸ்' நிறுவனத்தின், 10 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.இந்த இரண்டு நிறுவனங்களின் பங்குகளையும், இந்த நிதியாண்டுக்குள் விற்பனை செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இது குறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பங்கு விற்பனைக்கான பணிகளை நிர்வகிப்பதற்கான வங்கிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளன. தற்போது மத்திய அரசின் வசம், என்.எப்.எல்., நிறுவனத்தின், 74.71 சதவீத பங்குகளும்; ஆர்.சி.எப்., நிறுவனத்தின், 75 சதவீத பங்குகளும் உள்ளன.

என்.எப்.எல்., நிறுவன பங்குகளை விற்பதன் மூலம், 500 கோடி ரூபாயும்; ஆர்.சி.எப்., நிறுவன பங்குகளை விற்பனை செய்வதின் மூலம், 400 கோடி ரூபாயும் திரட்ட முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
16-ஏப்-202112:54:51 IST Report Abuse
Nallavan Nallavan பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் இவற்றை நஷ்டத்துடன் தொடர்ந்து இயக்குவதால் மக்களின் வரிப்பணம் வெட்டிச்சம்பளத்தில், ஊழலில் விரயமாகிறது ........ வருமான வரி கட்டுபவர்கள் என்றால் "நஷ்டத்தில் இயக்காதே, விற்று விடு" என்று கருத்து எழுதுவார்கள் ...... வருமான வரி கட்டாதவர்களும், சமூகப்பொறுப்பு இல்லாதவர்களும் "அரசே தொடர்ந்து நடத்தவேண்டும்" என்பார்கள் ........
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
16-ஏப்-202112:15:00 IST Report Abuse
தல புராணம் கடே வெலெக்கீ பாதி வெலே..
Rate this:
Cancel
Rate this:
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
16-ஏப்-202114:04:35 IST Report Abuse
Raman Muthuswamyபோற போக்கிலே நம்ப வேஷ்டி சட்டையை கூட வித்துடுவாங்க போல இருக்கு...
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
16-ஏப்-202114:58:51 IST Report Abuse
கொக்கி குமாரு பொது துறை நிறுவனங்களின் மொத்த நஷ்டம் 3 லட்சம் கோடிகளை நெருங்குகிறது. அங்கு இருப்பவர்களுக்கு வேலையே செய்யாமல் உங்கள் வரிப்பணத்தில் சம்பளமும், போனஸும் கொடுக்கப்பட்டு உங்கள் வரிப்பணத்தில் வேஷ்டி சட்டை வாங்கி உடுத்துகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா, தெரியாதா?...
Rate this:
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
17-ஏப்-202113:40:56 IST Report Abuse
Raman Muthuswamyகோணங்கி குமாரு அவர்களே :: பொது துறை நிறுவனங்களின் பணியாளர்கள் எப்படியோ பணியாற்றுகிறார்கள் என்பதும் அவர்கள் வேஷ்டி-சட்டை உடுத்தி இருப்பதையும் கண்ணாரக்க கண்டு களித்து உள்ளான் இந்த விமரிசகன் .. ஆயினும் நமது வரிப்பணத்தில் தான் அவர்களது இந்த வேஷமும் .. நஷ்டம் கோடிக்கணக்கில் என்பதை எல்லாம் அறியமாட்டான் .. நீங்கள் நிதி அமைச்சகத்திற்கு நெருக்கம் போல .. அதுதான் இந்த சீகிரெட் விஷயம் எல்லாம் கோபாலபுரத்துக்காரருக்கு அத்துப்படி .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X