அமெரிக்க பார்லிமென்டில் அம்பேத்கருக்கு கவுரவம்

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
வாஷிங்டன்: இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம், அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டாக்டர் அம்பேத்கரின், 130வது பிறந்த நாள், நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபையில், அம்பேத்கரை கவுரவிக்க கோரும் தீர்மானத்தை, ஜனநாயக கட்சி உறுப்பினர் ரோ கன்னா
birth anniversary, BR Ambedkar, Ambedkar

வாஷிங்டன்: இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரை கவுரவிக்கும் தீர்மானம், அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டாக்டர் அம்பேத்கரின், 130வது பிறந்த நாள், நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபையில், அம்பேத்கரை கவுரவிக்க கோரும் தீர்மானத்தை, ஜனநாயக கட்சி உறுப்பினர் ரோ கன்னா தாக்கல் செய்துள்ளார்.


latest tamil newsஅதில் கூறப்பட்டுள்ளதாவது: அனைவருக்கும் சம உரிமை, மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதில், அம்பேத்கர் உறுதியாக இருந்தார். அவரது கொள்கை, இந்தியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.அம்பேத்கரை கவுரவித்து தீர்மானம் நிறைவேற்றுவதன் வாயிலாக, அவர் ஆற்றிய பணிகள் பற்றி, உலகில் உள்ள இளம் தலைவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

உழைப்புகேற்ற ஊதியம், பெண் தொழிலாளர்களுக்கு சம உரிமை, அகவிலைப்படி உட்பட பல சீர்திருத்தங்களை, இந்தியாவின் அரசியல் சட்டத்தில் அவர் அறிமுகப்படுத்தி உள்ளார். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹிந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள் ஆகியோர், 'பைசாகி' என்ற பெயரில் புத்தாண்டு கொண்டாடுகின்றனர். பைசாகி விழா மற்றும் அதை கொண்டாடுபவர்களை அங்கீகரிக்க, பிரதிநிதிகள் சபையில், உறுப்பினர் ஜான் கரமென்டி, தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
magan arumugam - london,யுனைடெட் கிங்டம்
16-ஏப்-202115:25:23 IST Report Abuse
magan arumugam As a indian citizen we are all have to be proud
Rate this:
Cancel
Raja - Trichy,இந்தியா
16-ஏப்-202114:55:03 IST Report Abuse
Raja One of the founding India National leaders is being celebrated by the US parliament. I feel proud of it. This accolade has come very late, but it is priceless and very fitting for every Indian citizen in India, US and all around the world. Great accomplishments carried out by Dr. Ambedkar many years ago is still the need of the world. Leaders around the globe are still struggling to achieve what Dr. Ambedkar delivered for Indians. Indians, African-Americans and women face tematic discrimination at various levels in the western world. Dr. Ambedkar's recognition of equality, justice and liberty is the solution, and it should be integrated in betterment of human rights policies.
Rate this:
Cancel
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
16-ஏப்-202112:35:19 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN : "அனைவருக்கும் சம உரிமை, மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதில், அம்பேத்கர் உறுதியாக இருந்தார். அவரது கொள்கை, இந்தியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்."- இது அமெரிக்க நாடளுமன்றத்தில் சமர்ப்பிக்கபட்ட தீர்மானம். இத்தீர்மானத்தை அம்பேத்கரை தலைவராக வணங்கும், மற்றும் அம்பேத்கர் மேல் மரியாதை வைத்துள்ள அனைவரும் பின்பற்ற வேண்டும் சாதி மத இன பாகுபாடின்றி குறிப்பாக திராவிட கட்சிகள் அனைத்தும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X