மழைக்கு தாங்காமல் விழுந்தது ஸ்மார்ட் சிட்டி குளத்தின் சுவர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழைக்கு தாங்காமல் விழுந்தது 'ஸ்மார்ட் சிட்டி' குளத்தின் சுவர்

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (67)
Share
கோவை : கோவையில் ரூ.62.17 கோடிக்கு 'ஸ்மார்ட் சிட்டி'யில் மேம்படுத்தப்படும் உக்கடம் பெரிய குளத்தின் மதில் சுவர் மழைக்குத் தாங்காமல் பெயர்ந்து விழுந்தது.கோவை நகர் பகுதியில் உள்ள ஒன்பது குளங்களில் ரூ.377.54 கோடி மதிப்பில் 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் நடந்து வருகின்றன. உக்கடம் பெரிய குளத்தின் தெற்கு கரையில் ரூ.62.17 கோடியில் வேலைகள் நடந்து வருகின்றன. கரையில் 2.5 மீ. அகலத்துக்கு
smart city, Coimbatore, Kovai

கோவை : கோவையில் ரூ.62.17 கோடிக்கு 'ஸ்மார்ட் சிட்டி'யில் மேம்படுத்தப்படும் உக்கடம் பெரிய குளத்தின் மதில் சுவர் மழைக்குத் தாங்காமல் பெயர்ந்து விழுந்தது.

கோவை நகர் பகுதியில் உள்ள ஒன்பது குளங்களில் ரூ.377.54 கோடி மதிப்பில் 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் நடந்து வருகின்றன. உக்கடம் பெரிய குளத்தின் தெற்கு கரையில் ரூ.62.17 கோடியில் வேலைகள் நடந்து வருகின்றன. கரையில் 2.5 மீ. அகலத்துக்கு சைக்கிள் பாதை உருவாக்கப்படுகிறது.

அதை தொட்டவாறு 1.5 மீட்டர் அகலத்துக்கு மண் கொட்டி சமன்படுத்தி ஆக்கிரமிப்பு உருவாகாத வகையில் மதில் சுவர் கட்டி இரும்பு கிரில் அமைக்கப்படுகிறது. 15 அடி உயரத்துக்கு கட்டப்பட்டிருந்த மதில் சுவர் நேற்று முன்தினம் இரவு கன மழைக்கு இடிந்து விழுந்தது. அப்பகுதி காலியிடமாக இருந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இக்குளத்தில் பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை.


latest tamil news



சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியிட இருப்பதாக தகவல் வந்ததும் பிப். 26ல் அவசர அவசரமாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. தரமின்றி கட்டுமான பணி மேற்கொண்டதால் மழைக்குத் தாங்காமல் பெயர்ந்து விழுந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது 'மண் ஈரமாகி செங்கல் சுவர் இடிந்து விழுந்துள்ளது. அப்பகுதியில் கான்கிரீட் சுவர் கட்டப்படும்' என்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X