அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு கட்டுமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்: கமல்

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
சென்னை : 'தமிழகம் முழுதும், ஐந்தாண்டுகளில் கட்டப்பட்ட அரசு கட்டுமானங்கள் அனைத்தும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை: கோவை உக்கடம், பெரியகுளத்தின் கரையில் கட்டப்பட்டிருந்த, 12 அடி உயர தடுப்புச் சுவர், ஒரு நாள் மழைக்கே இடிந்து விழுந்துள்ளது. இச்சுவர், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கட்டப்பட்டு
Kamal, Kamal Haasan, MNM, கமல், கமல்ஹாசன்

சென்னை : 'தமிழகம் முழுதும், ஐந்தாண்டுகளில் கட்டப்பட்ட அரசு கட்டுமானங்கள் அனைத்தும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்' என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை: கோவை உக்கடம், பெரியகுளத்தின் கரையில் கட்டப்பட்டிருந்த, 12 அடி உயர தடுப்புச் சுவர், ஒரு நாள் மழைக்கே இடிந்து விழுந்துள்ளது. இச்சுவர், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கட்டப்பட்டு ஆறு மாதங்களே ஆகிறது. ஆறு மாதத்தில் அடித்துச் செல்லப்படும் தடுப்பணை, கட்டும் போதே இடிந்து விழும் மருத்துவமனை, திறப்பு விழாவின் போதே நொறுங்கும், 'மினி கிளினிக்' சுவர் என, தொடரும், 'டெண்டர் அரசின்' சாதனை பட்டியலில், கோவை பெரியகுளம் தடுப்புச் சுவரும் இணைந்திருக்கிறது.


latest tamil news



ஆயிரம் ரூபாய், 'எலக்ட்ரிக் ஷேவருக்கு' கூட, ஒரு ஆண்டு வாரண்டி இருக்கிறது. கோடிக்கணக்கில் டெண்டர் விட்டு கட்டப்படும் கட்டுமானங்களுக்கு ஏன் கேரண்டியும், வாரண்டியும் இல்லை. 'இ- - டெண்டர்'கள் கூட சம்பந்திகளுக்கும், மச்சினன்களுக்கும் அளிக்கப்படும் மாயம் என்ன? இந்தக் கட்டுமானங்கள் இடிந்து விழுந்த பின், ஒப்பந்ததாரர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன; எத்தனை அதிகாரிகள் தண்டிக்கப்பட்டனர்?


latest tamil news



அடிப்படை வசதிகளே சரியாக இல்லாத நகரத்தில், அழகுப்படுத்தும் பணிகள் என்ற பெயரில் நடப்பதெல்லாம், சுரண்டல் தான் என்பதன் சாட்சியே, சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த சம்பவம்.கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகம் முழுதும் கட்டப்பட்ட, அனைத்து அரசு கட்டுமானங்களும், கறாரான ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். போன பணம் போனது தான் என்றாலும், குறைந்தபட்சம் உயிரிழப்புகளையாவது தடுக்க, இந்த முன்னெச்சரிக்கை உதவும்.இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
16-ஏப்-202119:11:39 IST Report Abuse
Bharathi நல்ல கதையா இருக்கே. 45% கமிஷனும் வாங்கிட்டு தரமாவும் இருக்கணும்னா எப்படி? போங்கு ஆட்டமா இருக்கே.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
16-ஏப்-202117:26:47 IST Report Abuse
r.sundaram திருநெல்வேலி-தூத்துக்குடி நான்குவழி சாலையில் வல்லநாடு அருகே ஒரு பாலத்தில் சாலை பெயர்ந்து ஓட்டை விழுகிறது. இதன் தரம் எங்கிருக்கிறது? கடந்த ஐந்து வருடங்கள் என்று அல்ல, விசாரணை என்று ஆரம்பித்தால் எண்பதுகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். எத்தனை ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டக்கூடாது இடங்களில் கட்டப்பட்டு கட்டிடங்கள உபயோகிக்கப்படாமல் இருக்கின்றன. இதெல்லாம் கழக ஆட்சிகளின் அலங்கோலம். ஒரு கட்சியை மட்டும் குற்றம் சொல்லி பிரயோஜனம் இல்லை. இன்று காங்கிரஸ் கூட காமராஜ் ஆட்சி என்று சொல்வது இல்லை. அனால் இன்று இருப்பது இந்திரா காங்கிரஸ். அவர்கள் காமராஜை பற்றி பேசவே முடியாது. அண்ணா கூட இறக்கும் தருவாயில் ஆளத்தெரியாத ஒரு கொள்ளை கும்பலிடம் ஆட்சியை விட்டு போகிறேன் என்று வருத்தப்பட்டதாக ஓரு செய்தி உண்டு. இன்று நாம் இவர்களை நினைத்து வருத்தப்பட்டு என்ன செய்ய முடியும். தமிழ் நாட்டுக்கு கிரகணம் ஆரம்பித்தது அறுபத்தி ஏழில். என்று முடியுமோ தெரிய வில்லை.
Rate this:
Cancel
16-ஏப்-202116:25:04 IST Report Abuse
ஆரூர் ரங் இதே கோவை செந்தமிழ்😗 மாநாட்டின் போது முழுக் கட்டிடமும் 😪புதைந்தது எந்த ஆட்சியில்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X