பொது செய்தி

இந்தியா

முஸ்லிமாக புதைக்கப்பட்ட ஹிந்து; சவுதி அரேபியாவில் நடந்த குளறுபடி

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: 'சவுதி அரேபியாவில், முஸ்லிம் என தவறாக கூறி, அந்த மத வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்ட ஹிந்துவின் உடல், இந்தியாவுக்கு விரைவில் எடுத்து வரப்படும்' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.மேற்காசியாவைச் சேர்ந்த சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த சஞ்சீவ் குமார், 51, என்பவர், சில மாதங்களுக்கு முன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து, அவர் உடலை இந்தியாவுக்கு
HinduMan, Buried, Muslim, SaudiGovt, சவுதி அரேபியா, ஹிந்து, முஸ்லிம்

புதுடில்லி: 'சவுதி அரேபியாவில், முஸ்லிம் என தவறாக கூறி, அந்த மத வழக்கப்படி அடக்கம் செய்யப்பட்ட ஹிந்துவின் உடல், இந்தியாவுக்கு விரைவில் எடுத்து வரப்படும்' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

மேற்காசியாவைச் சேர்ந்த சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த சஞ்சீவ் குமார், 51, என்பவர், சில மாதங்களுக்கு முன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து, அவர் உடலை இந்தியாவுக்கு எடுத்து வர, மனைவி அஞ்சு சர்மா முயற்சி மேற்கொண்டார். இரு வாரங்கள் கழித்து, சஞ்சீவ் குமார், சவுதி அரேபியாவில் முஸ்லிம் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டதாக, ஜெட்டாவில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்தது. அத்துடன், துாதரக அதிகாரி ஒருவர், சஞ்சீவ் குமார், ஒரு முஸ்லிம் என, இறப்பு சான்றிதழில் தவறாக குறிப்பிட்டதால், இந்த குளறுபடி நடந்ததாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும், இந்திய துாதரகம், அஞ்சு சர்மாவுக்கு கடிதம் எழுதியிருந்தது.


latest tamil news


இதனால் அதிர்ச்சி அடைந்த அஞ்சு சர்மா, 'ஹிந்து முறைப்படி இறுதிச் சடங்கு செய்வதற்காக, கணவரின் உடலை இந்தியாவுக்கு எடுத்து வர உத்தரவிட வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீபா சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளியுறவு அமைச்சகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிபுதாமன் சிங் பரத்வாஜ், ''சவுதி அரேபிய அரசு, சஞ்சீவ் குமார் புதைக்கப்பட்ட இடத்தை கண்டு பிடித்துள்ளது. விரைவில் உடல் இந்தியா எடுத்து வரப்படும்,'' என, தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
16-ஏப்-202117:09:17 IST Report Abuse
Velumani K. Sundaram மதத்திற்கு அப்பாற்பட்டு இதை நான் பார்க்கிறேன். இந்திய தூதரக அதிகாரிமீது நம்பகத்தன்மை இல்லை. இது தெரிந்தே செய்த தவறு. அவருக்கு முறைப்படி தண்டனை அளிக்கவேண்டும். சில தூதரக அதிகாரிகளின் நடவடிக்கைகள் பொதுவாகவே நம்பக்கூடியதாக இருக்கவில்லை என்பது வருத்தமே
Rate this:
Cancel
16-ஏப்-202115:35:23 IST Report Abuse
அருணா கருவறை முதல் கல்லறை வரை மதத்தை விடாத மனிதர்கள். இறந்த பின்னும் இட ஒதுக்கீடு இல்லை இடு காட்டிலும்.. வேதனை.
Rate this:
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
16-ஏப்-202117:31:16 IST Report Abuse
கதிரழகன், SSLCதலித்துக்கு தனி இடுகாடு. தனி மாதா கோவில். மேல்சாதி மாதா கோவில் உள்ள விட்டாலும் சைடு கதவு வழியா வந்து தரையில உக்காரனும். மேல்சாதிக்கு நாற்காலி. இப்படி இருக்கு நெலம. முக்கா வாசி இந்துக்களுக்கு இப்படி நடக்கறது தெரியாது. அதான் "எல்லாரும் சமம் " புருடா விடறது நம்பி மதம் மாறி மாட்டிகிட்டு பத்து சதவீதம் தண்டல் வசூலிக்கிற பாஸ்டர் பாவமண்ணிப்பு கூண்டுல கேட்டதை வெச்சு மிரட்டற பாதர் ன்னு முழிக்கிறாக....
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
16-ஏப்-202110:13:56 IST Report Abuse
தல புராணம் மனிதனுக்கு மதம் இருக்குன்னா, கடவுளுக்குமா மதம்? உசிரோடு இருக்கும் போது மதம் பிடிச்சி கொன்னீங்க. செத்த பெறகுமா?
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
16-ஏப்-202110:56:10 IST Report Abuse
Dr. Suriyaஅதனாலதான் பின்லேடனை எங்கு புதைத்தார்கள் என்று கூட தெரியாமல் மறைத்துவிட்டார்கள் போல ... அவரை பார்த்து யாருக்கும் மதம் பிடிக்க கூடாது என்று ........
Rate this:
Thamilarasu K - Salem,இந்தியா
16-ஏப்-202112:24:10 IST Report Abuse
Thamilarasu Kமிக சரி, இறைவன் ஒருவனே, பெயர்கள் பல இருக்கலாம்... உடல் மண்ணுக்கானது, புதைத்த பிறகு மதம் அது, இது என்று பார்த்து என்ன பயன் ? பல கடவுள்கள் இருப்பது போலவும் இங்கே நாம் கட்சி நடத்துவது போல் அங்கே அவர்கள் உட்கார்ந்து கொண்டு யாருக்கு எத்தனை பக்தர்கள் என்று போட்டி போட்டு கொண்டிருப்பது போலவும் நாம் நினைத்தால் அது கடைந்தெடுத்த முட்டாள் தனம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X