வெள்ளி முதல் வியாழன் வரை (16.4.2021 - 22.4.2021 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.
மேஷம்
சுக்கிரன், குரு, புதன் சாதக நிலையில் உள்ளனர். ராமர் வழிபாடு நிம்மதி தரும்.
அசுவினி: இந்த வாரம் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உங்களின் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். முயற்சியில் கூடுதல் நன்மை கிடைக்கும்.
பரணி: மேலதிகாரிகள் உங்களை உயர்த்திப் பேசுவர். உங்களின் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். பெரியோரின் ஆசியை பெறுவீர்கள். புதிய விஷயம் கற்பீர்கள். புத்திசாலித்தனம் காரணமாக வியத்தகு விஷயம் ஒன்றை செய்வீர்கள்.
கார்த்திகை 1: புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். எதிர்பாலின நட்பு ஆதாயம் தரும். திடீர்க்கோபம் பிரச்னையில் கொண்டுவிடக்கூடும். எதிலும் நிதானம் தேவை.
ரிஷபம்
புதன், சந்திரனால் அதிர்ஷ்ட பலன்கள் உண்டு. காமாட்சி வழிபாடு சுபிட்சம் தரும்.

கார்த்திகை 2,3,4: புது விஷயங்கள் கற்று மேலதிகாரிக்கு வியப்பளிப்பீர்கள். தாயாருக்கு உங்களால் நன்மை உண்டு. மாணவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தோர் வகையில் ஆதாயம் கிடைக்கும்.
ரோகிணி: திடீர் செலவுகள் பற்றி பயம் வேண்டாம். குழந்தைகளுக்கு முன்பு செல்லம் கொடுத்ததன் பலன் கவலை தரும். அகங்காரமும், கர்வமும் தலைதுாக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நட்பு வட்டம் விரிவடையும்.
மிருகசீரிடம் 1,2: உங்களுக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உருவாகும். தற்காலிகப் பாராட்டுக்களை நம்பி வியந்து போக வேண்டாம். உங்களைப் பற்றி நீங்களே உயர்வாக நினைத்து கற்பனையில் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
மிதுனம்
சூரியன், புதன், சுக்கிரனால் நற்பலன் கிடைக்கும். சிவன் வழிபாடு சிரமத்தை போக்கும்.
மிருகசீரிடம் 3,4: தந்தையால் உங்களுக்கும் உங்களால் அவருக்கும் நன்மைகள் விளையும். பெண்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
திருவாதிரை: உங்களின் கவரும் தன்மை அதிகரிக்கும். சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். வெளிநாட்டுக் கல்வி பற்றி தீர்மானிப்பீர்கள். பல காலம் கிடப்பில் இருந்த விஷயங்கள் சாதகமாக முடியும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: அரசாங்கத்திடம் மனு செய்த விஷயம் குறித்து நற்செய்தி வரும். உடன்பிறந்தோர் வகையில் சிறு சங்கடங்கள் நேரும். மூக்குக் கண்ணாடி பவர் மாற்ற வேண்டி வரும். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
கடகம்
புதன், சுக்கிரன், ராகு நன்மைகளை வழங்க உள்ளனர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.
புனர்பூசம் 4: தாயாருடன் கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டிலிருந்து நீங்கள் விரும்பிய செய்தி வரும். புதிய விஷயத்தை கற்று அவற்றின் மூலம் நன்மை அடைவீர்கள். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும்.
பூசம்: பாஸ்போர்ட், விசா கிடைக்கும். தாயார் உடல்நிலை பற்றி விழிப்புணர்வுடன் இருங்கள். வெளிநாட்டுப் பயணம் உறுதியாகும். உங்களின் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர்.
ஆயில்யம்: பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி காண்பீர்கள். மேற்படிப்பு பற்றிய தீர்மானம் ஏற்படும். நீங்கள் பொறுப்பான பதவிக்குப் பொருத்தம் என்பது உறுதியாகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
சிம்மம்
குரு, செவ்வாய், புதன், சுக்கிரனால் கூடுதல் நன்மை கிடைக்கும். சாஸ்தா வழிபாடு துன்பம் போக்கும்.
மகம்: சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிறருக்கு புதிய விஷயங்களைக் கற்றுக் கொடுப்பீர்கள். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். கல்வியில் மேம்பாடு உண்டாகும். புதிய வீடு வாங்கத் திட்டமிடுவீர்கள்.
பூரம்: காதலில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாலினத்தின் நட்பு நன்மை தரும். மகிழ்ச்சியும், குதுாகலமும் நிறைந்த வாரம். உங்களின் அழகுணர்ச்சி அதிகரிக்கும். வீட்டை அலங்கரிப்பீர்கள். வெளிநாட்டுத் தொடர்பு விரிவடையும்.
உத்திரம் 1: சருமப் பாதுகாப்பு பற்றிய கவனம் தேவை. பணியிடத்தில் குழுத் தலைவராவீர்கள். திடீர்க்கோபம் வந்து உடனே சமாதானமாவீர்கள். கலைத்துறையினர் சாதிப்பீர்கள். குடும்பச் சுமையைத் திறம்பட நிர்வகிப்பீர்கள்.
கன்னி
சந்திரன், செவ்வாய், புதன் அதிர்ஷ்ட அமைப்பில் உள்ளனர். சூரியன் வழிபாடு வளம் தரும்.
உத்திரம் 2,3,4: பணியிடத்தில் ஏற்பட்ட தவறுகளைச் சீரமைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். கோபத்தைக் குறைத்து வெல்வீர்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டுவீர்கள். தாயாரிடம் பரிவு காட்டி அவரின் ஆசியைப் பெறுவீர்கள்.
அஸ்தம்: நண்பர்களின் பணத்தேவையைத் தீர்த்து வைப்பீர்கள். உங்கள் துறைக்குத் தேவையான புதிய விஷயங்களைக் கற்பீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிரிகள் மனம் மாறுவார்கள். எதிர்கால நலனுக்காக திட்டமிடுவீர்கள்.
சித்திரை 1,2: அதிர்ஷ்டம் காரணமாக நூலிழையில் ஆபத்திலிருந்து தப்புவீர்கள். தந்தையுடன் வாக்குவாதம் செய்து நிம்மதியை இழக்க வேண்டாம். நெருங்கிய நண்பர்களின் வழிகாட்டுதலால் வெற்றி பெறுவீர்கள்.
துலாம்
புதன், சுக்கிரன், குருவால் பல நன்மைகள் உண்டு. சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
சித்திரை 3,4: உங்களின் வழிகாட்டுதலால் பலர் நன்மையடைவர். நன்றியுணர்ச்சியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைய வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பணியிடத்தில் மேலதிகாரி உங்களை பாராட்டுவார்.
சுவாதி: புதிய விஷயத்தை கற்று பிறருக்கும் சொல்லி தருவீர்கள். தோற்றத்தில் கவர்ச்சி அதிகரிக்கும். தாய்மாமன் நன்மை செய்வார். ஆசிரியரிடம் பாராட்டு வாங்குவீர்கள். காதல் ஈடுபாடு மகிழ்ச்சி தரும்.
விசாகம் 1,2,3: பிள்ளைகளின் செயல்பாடுகள் நிம்மதி தரும். கூடுதலாக உழைத்து சிறிது நன்மை அடைவீர்கள். உங்கள் கீழ் பணிபுரிபவர்கள் தரும் தொல்லைகளை சமாளிப்பீர்கள். மன தைரியம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: 16.4.2021 காலை 6:00 - 17.4.2021 காலை 10:56 மணி
விருச்சிகம்
சனி, புதன், குரு நலமளிக்கக் காத்திருக்கின்றனர். அனுமன் வழிபாடு வெற்றி தரும்.
விசாகம் 4: உங்களின் உழைப்பு வீண் போகாது. என்றைக்கோ செய்த பிழையால் இந்த வாரம் சிரமம் ஏற்படலாம். தாயாருடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை இருக்கட்டும்.
அனுஷம்: பிறரை பற்றி யாரிடமும் குறைகூற வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்றிருப்பது நல்லது. பணியாளர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். எதிலும் நிதானம் தேவை.
கேட்டை: வங்கி சேமிப்பு உயரும். துயரங்கள் காணாமல் போகும். வருமானம் உயர நீங்கள் எடுத்த முயற்சி நற்பலன் அளிக்கும். யாருக்கும் வாக்களிக்க வேண்டாம். நன்கு யோசித்து முடிவெடுக்கிறீர்கள் என்பதால் பிரச்னை வராது.
சந்திராஷ்டமம்: 17.4.2021 காலை 10:57 - 19.4.2021 இரவு 8:37 மணி
தனுசு
சூரியன், புதன், சுக்கிரன் யோகமான அமைப்பில் உள்ளனர். நரசிம்மர் வழிபாடு பயம் போக்கும்.
மூலம்: தந்தையால் எதிர்பாராத நன்மை வந்து சேரும். தலையில் ஏற்பட்டிருந்த பிரச்னை தீரும். உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என்ற குறை நீடிக்கும். உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டாம்.
பூராடம்: புதிய தொழில் ஆரம்பிக்கும் எண்ணத்தை இப்போதைக்கு ஒத்தி வைக்கவும். சிறு சிறு கவலைகளால் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம். பணியிடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சி எடுங்கள்.
உத்திராடம் 1: தவறு செய்து பிரச்னையில் மாட்டிக் கொள்ள வேண்டாம். நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் தாமதமான பலனையே தரும். எதிர்பாலினத்தைச் சேர்ந்தவரால் நன்மை உண்டாகும். சேமிப்பில் ஆர்வம் கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம்: 19.4.2021 இரவு 8:38 - 22.4.2021 அதிகாலை 3:51 மணி
மகரம்
குரு, சுக்கிரன், செவ்வாய் அதிர்ஷ்டகர அமைப்பில் உள்ளனர். துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.
உத்திராடம் 2,3,4: ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் கவனம் தேவை. நீங்கள் மதிக்கும் நபர் ஒருவர் உங்களை பிரச்னையில் இருந்து மீட்பார். சிரமப்பட்டு உழைத்தாலும் உடனடிப் பலன் இல்லை என்ற குறை இருக்கும்.
திருவோணம்: எதிர்பாலின அதிகாரியின் உதவி கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் எதையும் எதிர்பார்க்க வேண்டாம். சிறிய பலன் பெற கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.
அவிட்டம் 1,2: சகோதரரால் சிறு நன்மை ஏற்படும். எந்த வம்பிலும் மாட்டக்கூடாது என்று கவனமாக இருங்கள். வீடு வாடகை பற்றிய கவலை நீங்கும். பிறரது கஷ்டங்களை புரிந்து கொண்டு உதவி செய்வீர்கள்.
சந்திராஷ்டமம்: 22.4.2021 அதிகாலை 3:52 மணி - நாள் முழுவதும்
கும்பம்
புதன், செவ்வாய் நலம் தரும் அமைப்பில் உள்ளனர். மீனாட்சி வழிபாடு சகல நன்மை தரும்.
அவிட்டம் 3,4: உழைப்பின் மூலம் பெரிய பலன்களை எதிர்பார்க்க வேண்டாம். உங்களால் நன்மை அடைந்தவர்கள் நன்றி பாராட்டுவர். உடல் சோர்வு ஏற்படாமல் கவனமாக இருங்கள். நண்பர்களுடன் விருந்துகளில் பங்கேற்பீர்கள்.
சதயம்: பகை பாராட்டிய சகோதரர்கள் புண்ணிய காரியத்திற்காகச் சேருவர். திடீர் நிகழ்வுகளால் கஷ்டங்கள் ஓரளவு விலகும். வாரிசுகளுக்கு நன்மை ஏற்படும். பெண்கள் குடும்ப நலனில் மிகுந்த அக்கறை கொள்வார்கள்.
பூரட்டாதி 1,2,3: கடந்த வாரங்களில் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். குலதெய்வ வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்வீர்கள். மாணவர்களுக்கு உதவி செய்வீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
மீனம்
சனி, ராகு, செவ்வாயால் அதிர்ஷ்டம் உண்டு. குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.
பூரட்டாதி 4: உங்கள் உழைப்பைப் பணியிடத்தில் புரிந்து கொள்வார்கள். உணர்ச்சிவசப்பட்டு வாய்ப்புகளைக் கெடுத்துக் கொண்டிருந்த நிலை மாறும். சில பழக்க வழக்கங்களை மாற்றி விமர்சனத்துக்கு உள்ளாவீர்கள்.
உத்திரட்டாதி: திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டு. சிறு சிறு விருப்பங்கள் நிறைவேறும். தேவையற்ற பொருட்களை வாங்கிப் பணத்தை வீணாக்க வேண்டாம். நிம்மதி மீளும். மேலதிகாரி மூலம் பாராட்டு கிடைக்கும்.
ரேவதி: முன்பிருந்த தாமதங்கள் நீங்கும். வியாபாரிகளுக்கு நன்மைகள் கிடைக்கும். சம்பளம் கிடைக்க தாமதமாகலாம். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு உதவி செய்ய காத்திருப்பர். புதிய விஷயத்தில் ஈடுபடுவீர்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE