பொது செய்தி

இந்தியா

ரன்தீப் சிங், திக்விஜய சிங்குக்கு கொரோனா

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் திக்விஜய சிங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பில் பல்வேறு அரசியல் தலைவர்களும் சிக்கி வருகின்றனர். சமீபத்தில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்
DigvijayaSingh, RandeepSingh, CovidPositive, Congress

புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் திக்விஜய சிங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பில் பல்வேறு அரசியல் தலைவர்களும் சிக்கி வருகின்றனர். சமீபத்தில் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தனக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 5 நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


latest tamil news



அதேபோல் மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வரும் காங்., மூத்த தலைவருமான திக்விஜய சிங்கும் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் டில்லியில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் விரைவாக பரிசோதனை செய்து கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJAN - murasori,இந்தியா
16-ஏப்-202118:01:24 IST Report Abuse
RAJAN எல்லாம் வல்ல சிவ பெருமான் அருளால் விரைவில் குணமடைய கடவுளை வேண்டிக்கொள்கிறேன்
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
16-ஏப்-202114:57:28 IST Report Abuse
Sridhar மகிழ்ச்சி - சீக்கிரமே குணமடைந்தால்
Rate this:
Rate this:
Cancel
வல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா
16-ஏப்-202112:59:16 IST Report Abuse
வல்வில் ஓரி ரெண்டு பெரும் "ஷ்டாளின் தா வர்ராரு.....விடியல் தரப்போறாரு " ன்னு அம்பது தடவ சொன்னா...போயிரும்..
Rate this:
வல்வில் ஓரி - A Proud Sanghi,இந்தியா
16-ஏப்-202113:33:50 IST Report Abuse
வல்வில் ஓரிஏதே......சீவன் போயிருமா?...
Rate this:
ஸ்டாலின் முதல்வரா வந்திட்டார் - செந்தமிழ்நாடு ,இந்தியா
16-ஏப்-202120:00:53 IST Report Abuse
ஸ்டாலின் முதல்வரா வந்திட்டார் ஏன் brown pant RSS பகவத :: "ஷ்டாளின் தா வர்ராரு.....விடியல் தரப்போறாரு " ன்னு அம்பது தடவ சொன்னதால் தான் discharge ஆனாரா என...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X