அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜாதி வன்முறையை தூண்டும் திமுக, காங்., விசிக: முருகன் குற்றச்சாட்டு

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (49)
Share
Advertisement
மதுரை: தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜாதி வன்முறையை தூண்டி விடுவதாக தமிழக பா.ஜ., தலைவர் முருகன் குற்றம்சாட்டினார்.மதுரையில் அம்பேத்கர் பிறந்த நாளன்று அவரது சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பா.ஜ.,வினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில பா.ஜ., தலைவர் முருகன் மதுரை வந்து அவரது சிலைக்கு
bjp, dmk , congress, l.muruganm, பாஜ, திமுக, எல்.முருகன்

மதுரை: தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜாதி வன்முறையை தூண்டி விடுவதாக தமிழக பா.ஜ., தலைவர் முருகன் குற்றம்சாட்டினார்.

மதுரையில் அம்பேத்கர் பிறந்த நாளன்று அவரது சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பா.ஜ.,வினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில பா.ஜ., தலைவர் முருகன் மதுரை வந்து அவரது சிலைக்கு மாலை அணிவித்தார்.


latest tamil news


இதன் பிறகு முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாட அனைத்து தகுதியும் பா.ஜ.,விற்கு மட்டும் தான் உள்ளது. பா.ஜ., ஆட்சியில் தான் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அவர் வாழ்ந்த 5 இடங்கள் நினைவு சின்னங்களாக மாற்றப்பட்டன. அவருக்கு மாலை அணிவிக்கவும், சொந்தம் கொண்டாடவும் பா.ஜ.,விற்கு அனைத்து உரிமையும் உள்ளது. அம்பேத்கரை ஜாதி தலைவராக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முயற்சி செய்கின்றனர்.

விடுதலை சிறுத்தைகளுக்கு அரசியல் செய்ய வேறு விஷயம் இல்லை. இதனால், இதனை அரசியலாக்குகின்றனர். தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜாதி வன்முறையை தூண்டி விடுகின்றனர். பா.ஜ.,வினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanand Louis - Bangalore,இந்தியா
17-ஏப்-202113:11:52 IST Report Abuse
Devanand Louis மதுரை திருமங்கலம் மின்சாரவாரிய லஞ்சம் வாங்கும் கொடுமையான தொழில், நிவாக சீர்கேடு ,தமிழ் நாடு அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்படாமலிருத்தல்,அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் -மதுரை திருமங்கலம் மின்சாரவாரியத்தின் உள்ள அணைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் எல்லோரும் லஞ்சம் வாங்குவதுதான் அவர்களின் தலையாய வேலை , லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு சின்ன வேலை அங்கு நடக்காது , பலவித தில்லுமுல்லு வேலைகளையும் செய்து எல்லா அலுவல் பணிகளுக்கும் லஞ்சம் கேட்கிறார்கள் மேலும் தமிழ் நாடு அரசுக்கு வரும் வருவாயை வரவிடாமல் கெடுக்கிறார்கள் .கொரோனாவால் நாடே பாதிப்படைந்துள்ளது ,மக்கள் கொரானாவால் மனநலம் மற்றும் வருவாய் இல்லாத இந்த நேரத்தில் திருமங்கலம் மின்சாரவாரியத்தின் மனித நேயமில்லாத லஞ்சம் வாங்கும் சர்வாதிகாரம் கொண்ட அதிகாரிகள், பொதுமக்கள் எல்லோரும் மின்சாரவாரியத்தின் இந்த கேடுகெட்ட வேலைகளால் மிகவும் கொதிப்படைந்துள்ளார்கள் ஆகையால் விஜிலென்ஸ் ரைடு தேவை திருமங்கலம் தமிழ் நாடு மின்சாரவாரியத்திற்கு
Rate this:
Cancel
Karthikeyan K Y - Chennai,இந்தியா
17-ஏப்-202112:04:07 IST Report Abuse
Karthikeyan K Y ஜாதியை வைத்து அரசியலும் அடையாளமும் அங்கீகாரமும் அதிகாரமும் ,கட்ட பஞ்சாயத்தும் செய்து கொண்டு திமுகவிடம் அடிவருடி வேலைகளை செய்து ஒரு MP பதவியும் வாங்கி கொண்டு இப்போது வெட்கமே இல்லாமல் கருது சொல்வதாக சொல்லிக்கொண்டு ஜாதி வெறியையும் மத வெறியையும் தூண்டி விட்டு கொண்டு இருக்கும் நிலைமையை அரசும் காவல் துறையும் பார்த்து கொண்டு இன்னும் ஏதும் வழக்கும் தொடர வில்லை.
Rate this:
Cancel
ramani - dharmaapuri,இந்தியா
17-ஏப்-202107:50:13 IST Report Abuse
ramani தமிழகத்தில் ஜாதி வெறி வளர காரணமானவர்கள் இந்த திமுக காங்கிரஸ் மற்றும் விடுதலைசிறுத்தை கட்சிகள்தான். இப்பொழுது இவர்கள் யோக்கியர்கள் போல் பேசுகின்றனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X