பொது செய்தி

இந்தியா

எடியூரப்பாவிற்கு மீண்டும் கொரோனா: மருத்துவமனையில் சிகிச்சை

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
பெங்களூரு : கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு, 2வது முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நேற்று, மட்டும் புதிய உச்சமாக 2.17 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மத்திய அமைச்சர்கள், பல கட்சி தலைவர்கள், மாநில முதல்வர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் கர்நாடக முதல்வர்
எடியூரப்பா, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, சிகிச்சை, மருத்துவமனை, கர்நாடகா, முதல்வர், yedurappa, karnataka, corona, corona virus, covid19, treatment,

பெங்களூரு : கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு, 2வது முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நேற்று, மட்டும் புதிய உச்சமாக 2.17 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மத்திய அமைச்சர்கள், பல கட்சி தலைவர்கள், மாநில முதல்வர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறி உள்ளதாவது: லேசான காய்ச்சல் ஏற்பட்ட உடன், கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. நான் நலமுடன் உள்ள போதிலும், டாக்டர்கள் அறிவுரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். சமீப நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைபடுத்தி கொள்வதுடன் பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார்.



latest tamil news


கர்நாடகாவில், கொரோனா பரவல் வேகமெடுத்த நிலையில், அதனை கட்டுப்படுத்துவது குறித்து கட்டுப்படுத்துவது குறித்து இன்று(ஏப்.,16) காலை சுகாதார அமைச்சர் சுதாகர் மற்றும் அதிகாரிகளுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டம் முடிந்த சிறிது நேரத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாளை நடைபெற உள்ள சட்டசபை இடைத்தேர்தலுக்காக கடந்த சில நாட்களாக எடியூரப்பா பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.
78 வயதாகும் எடியூரப்பாவிற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அவர், மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
17-ஏப்-202110:35:21 IST Report Abuse
sahayadhas வயசுதான் சரியில்ல
Rate this:
Cancel
VeeJay - Austin,யூ.எஸ்.ஏ
17-ஏப்-202100:30:10 IST Report Abuse
VeeJay Wish you a Speedy recovery Sir.
Rate this:
Cancel
TechT - Bangalore,இந்தியா
17-ஏப்-202100:24:50 IST Report Abuse
TechT covid wave 1.0 ஒரு முறை , covid 2.0 இன்னொருமுறை .... அட்மிட் சும்மா ஜோக்கு ....ஹி...ஹீ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X