பொது செய்தி

இந்தியா

கொரோனா சிகிச்சைக்கு படுக்கைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையா - டுவிட்டரில் டிரெண்டிங்

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி : சமூகவலைதளமான டுவிட்டரில் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பற்றியான விஷயங்கள் தான் அதிகம் டிரெண்ட் ஆகின்றன. குறிப்பாக நிறைய மாநிலங்களில் கொரோனோ சிகிச்சைக்கான படுக்கைகள், ஆக்ஸிஜன் போன்றவை பற்றாக்குறையாக உள்ளதாக கூறி டிரெண்ட் செய்கின்றன. இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரேநாளில் மட்டும் அதிகபட்சமாக நாடு முழுக்க 2
CoronaSecondWave, WhereIsPM, Hospitals, PMCARES

புதுடில்லி : சமூகவலைதளமான டுவிட்டரில் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பற்றியான விஷயங்கள் தான் அதிகம் டிரெண்ட் ஆகின்றன. குறிப்பாக நிறைய மாநிலங்களில் கொரோனோ சிகிச்சைக்கான படுக்கைகள், ஆக்ஸிஜன் போன்றவை பற்றாக்குறையாக உள்ளதாக கூறி டிரெண்ட் செய்கின்றன.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரேநாளில் மட்டும் அதிகபட்சமாக நாடு முழுக்க 2 லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான பேர் இறந்துள்ளனர். கடந்தாண்டை விட இந்தாண்டு இந்நோயின் தீவிரம் அதிகமாக உள்ளது. நோயை கட்டுப்படுத்த பல மாநிலங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக இரவுநேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு போன்றவை விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்நோயின் தாக்கம் தீவிரமாகி வருவதால் தடுப்பூசி செலுத்தும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.


latest tamil newsஇந்நிலையில் நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையை நாடி வருகின்றனர். ஆனால் பல ஊர்களில் மருத்துவமனைகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக படுக்கைகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக கூறப்படுகிறது. எல்லவாற்றையும் இறந்து போனவர்களை எரியூட்ட நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலங்களையும் சில ஊர்களில் காண முடிந்தது. குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்நோயால் பலியானவர்களை குவியல் குவியலாக எரிக்கும் போட்டோ, வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியளித்தன.

இதுபோன்ற அவநிலைகளை எல்லாம் சுட்டிக்காட்டி டுவிட்டர் தளவாசிகள் இன்று(ஏப்., 16) கொரோனா தொடர்பான விஷயங்களை டிரெண்ட் செய்கின்றனர். குறிப்பாக நாட்டின் பிரதமர் எங்கே சென்றார். நாட்டில் கொரோனா பிரச்னை தலைவிரித்தாடுகிறது. ஆனால் அவர் வாய் திறக்காமல் உள்ளார் என குறிப்பிட்டு #WhereIsPM என்ற ஹேஷ்டாக்களை தேசிய அளவில் டாப்பில் டிரெண்ட் செய்கின்றனர்.


latest tamil newsஇதுதவிர்த்து மருத்துவமனைகளில் நிலவும் கொரோனா சிகிச்சைக்கான அடிப்படை வசதிகள் பற்றாக்குறைகளை சுட்டிக்காட்டி #Hospitals என்ற ஹேஷ்டாக்கை டிரெண்ட் செய்கின்றனர். இதிலேயே படுக்கை வசதிகள் இல்லாதது, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளிட்டவைகளையும் சுட்டிக்காட்டி டிரெண்ட் செய்கின்றனர். மேலும் நாட்டில் இவ்வளவு பிரச்னைகள் நடந்து கொண்டு இருக்கிறது. பிரதமர் அவசரகாலத்திற்காக தனது பெயரில் உள்ள நிவாரண நிதியை பயன்படுத்தலாமே என சுட்டிக்காட்டி #PMCARES என்ற ஹேஷ்டாக்கை டிரெண்ட் செய்கின்றனர். இதில் மத ரீதியான சண்டை சச்சரவுகளும் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இவை தவிர்த்து பொதுவாக #CoronaSecondWave என்ற ஹேஷ்டாக்கும் டிரெண்ட் ஆகின்றன. இந்த ஹேஷ்டாக்கில் கொரோனா எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எப்படி அலட்சியமாக இருக்கின்றனர் உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatesh -  ( Posted via: Dinamalar Android App )
17-ஏப்-202112:02:29 IST Report Abuse
venkatesh Nee Moodu... Mask pottu un vaaya..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
17-ஏப்-202111:42:04 IST Report Abuse
தல புராணம் // குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்நோயால் பலியானவர்களை குவியல் குவியலாக எரிக்கும் போட்டோ, வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியளித்தன. // இருந்தாலும் இறந்தவர்கள் எண்ணிக்கயை அஞ்சு, பத்துன்று தானே போடுறாய்ங்க 🧐🤔
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஏப்-202100:10:55 IST Report Abuse
Pugazh V ஹலோ ஜனார்தனன், யோகி, ஜாவடேகர் எல்லாம் காங்கிரஸ் காரர்களோ? ட்விட்டர் போராளிகளை விமர்சனம் செய்யும் முன், ஏராளமான மக்களின் கேள்வி யான பிஎம் கேர்ஸ் என்ற பேரில் புடுங்கிய பணம் எங்கே என்ற கேள்வி க்கு விடை தேடிச் சொல்லுங்கள். ஏதோ ஒரு தனியார் நிறுவனமான ஸீரம் இண்டியா அயல்நாடு களுடனான.விற்பனை கறாரின் படி வேக்ஸின் ஏற்றுமதி செய்ததற்கு மோ:_ க்கு காவடி தூக்கி யவர்கள், இப்போது கேள்வி கேட்பவர்களை விமர்சனம் செய்வது மடத்தனம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X