பொது செய்தி

இந்தியா

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்: உ.பி., முதல்வர் அதிரடி

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
லக்னோ: உத்தர பிரதேசத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் முதல்முறை பிடிப்பட்டால் ஆயிரம் ரூபாயும், 2வது முறை பிடிப்பட்டால் ரூ.10 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 22,339 பேர் கொரோனா
UP, SecondMaskViolation, Fine, Ten Thousand Rupees, Sunday Lockdown, உபி, மாஸ்க், முகக்கவசம், அபராதம், ஊரடங்கு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் முதல்முறை பிடிப்பட்டால் ஆயிரம் ரூபாயும், 2வது முறை பிடிப்பட்டால் ரூ.10 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 22,339 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பள்ளிகள் மே 15ம் தேதி வரை மூடப்படும் எனவும், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும், தினசரி தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ள 10 மாவட்டங்களில் இரவு 7 மணி முதல் காலை 8 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.


latest tamil news


அதுமட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் விதமாக அம்மாநில முதல்வர் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது, முகக்கவசம் அணியாமல் முதல்முறை பிடிபட்டால் 1000 ரூபாயும், இரண்டாவது முறை பிடிபட்டால் 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஏப்-202122:18:32 IST Report Abuse
ஆப்பு பறந்து வந்து பரப்புனவருல்ல இவரும் ஒருத்தர். இப்போ உள்ளூர் ஆளுங்க கிட்டே அபராதம் வசூல்.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
16-ஏப்-202121:45:17 IST Report Abuse
தல புராணம் அறிவில்லாதவன் அதிரடிகள் இப்படித் தான் இருக்கும். கும்பமேளா நடக்குற எடத்தில போயி வசூல் பண்ணு. பத்தாயிரம் கோடி வசூலாகும். அங்கே எல்லாப்பயலும் மாஸ்க்கை இடுப்புலே கட்டி குளிக்கிறானுவோ 🤣😂
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
16-ஏப்-202121:41:32 IST Report Abuse
தல புராணம் கும்பமேளான்னு கும்மியடிச்சு நாளொன்றுக்கு பத்து லட்சம் பேருக்குன்னு கோடிக்கும் மேலே கொரோனாவை பரப்பி விட்டுட்டு இப்போ அபராதமாம். மூளை எங்கேயோ ஓட்டையில இருக்கும் போல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X