பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு: மருத்துவமனையில் 'எக்மோ' சிகிச்சை

Updated : ஏப் 17, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
சென்னை: நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில், உயிர் காக்கும், 'எக்மோ' சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 'கொரோனா தடுப்பூசிக்கும், மாரடைப்புக்கும் சம்பந்தமில்லை' என, டாக்டர்கள் தெரிவித்தனர். விழிப்புணர்வு திரைப்பட நடிகர் விவேக், 59, சினிமாவில் நடிப்பதுடன், அப்துல் கலாம் மீது கொண்ட பற்றால், மரக்கன்றுகளை நடுவதில் ஆர்வம்
Actorvivek, Vivek, விவேக்

சென்னை: நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில், உயிர் காக்கும், 'எக்மோ' சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 'கொரோனா தடுப்பூசிக்கும், மாரடைப்புக்கும் சம்பந்தமில்லை' என, டாக்டர்கள் தெரிவித்தனர்.


விழிப்புணர்வு



latest tamil news


திரைப்பட நடிகர் விவேக், 59, சினிமாவில் நடிப்பதுடன், அப்துல் கலாம் மீது கொண்ட பற்றால், மரக்கன்றுகளை நடுவதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்; மேலும், கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். கொரோனா தடுப்பூசி குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தன் குழுவினருடன், நேற்று முன்தினம், சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், 'கோவேக்சின்' தடுப்பூசி போட்டுக் கொண்டார்.


latest tamil news


இந்நிலையில், சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வீட்டில், விவேக், தன் குடும்பத்தினருடன் நேற்று காலையில் பேசி கொண்டிருந்த போது, லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக வடபழநியில் உள்ள, சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து

வருகின்றனர்.இது குறித்து, டாக்டர்கள் கூறியதாவது: நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதால், ரத்த நாள அடைப்பை சரி செய்யும், 'ஆஞ்சியோ' சிகிச்சை செய்யப்பட்டது. அதேபோல், இதய செயல்பாட்டை அதிகரிக்க, இயல்பு நிலைக்கு கொண்டு வர, உயிர் காக்கும் எக்மோ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால், அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.விவேக்கின், மக்கள் தொடர்பு அலுவலர் நிகில் முருகன் அளித்த பேட்டியில், ''நடிகர் விவேக் நலமாக உள்ளார். அவருக்கு, ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் நலம் பெற்று, செய்தியாளர்களை சந்திப்பார்,'' என்றார்.


சின்ன கலைவாணர்



கவிஞர் வைரமுத்து, 'சின்ன கலைவாணர், தம்பி விவேக் விரைந்து நலமுற்று மீள வேண்டும். மனிதர்களின் மாரடைப்பை தடுக்கிற நகைச்சுவை கலைப்பணியை, வாழ்நாள் எல்லாம் தொடர வேண்டும்' என, கூறியுள்ளார்.நடிகை குஷ்பு, 'நான் சந்தித்த மிகச் சிறந்த மனிதர்களுள் விவேக்கும் ஒருவர். மாரடைப்பால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை கேட்டு, அதிர்ச்சியடைந்தேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும்' என, கூறி
உள்ளார்.


latest tamil news





தடுப்பூசியால் பாதிப்பில்லை



நடிகர் விவேக் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது மன வேதனை அளிக்கிறது. அவர், தானாக முன்வந்து, கொரோனா தடுப்பூசி குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தடுப்பூசியால், மாரடைப்பு ஏற்படவில்லை. மேலும், மருத்துவ ரீதியாக,
ஒரே நாளில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை. அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வால், தமிழகத்தில் அதிகபட்சமாக, நேற்று ஒரே நாளில், 2.17 லட்சம் பேர், தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அவரது உடல்நிலை பாதிப்புக்கும், தடுப்பூசிக்கும் தொடர்பில்லை. தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நடிகர் விவேக், விரைவில் மீண்டு வருவார்.- ராதாகிருஷ்ணன், தமிழக சுகாதாரத் துறை செயலர்


'ஆஞ்சியோ பிளாஸ்டி'



நடிகர் விவேக், சுயநினைவின்றி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு இடது ரத்த நாளத்தில், 100 சதவீத அடைப்பு இருந்தது. உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து, அடைப்பு சரி செய்யப்பட்டது. பின், எக்மோ சிகிச்சையில், இதயம் மற்றும் நுரையீரல் செயல்பட்டு வருகிறது. அவர், 24 மணி நேரம், தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்; அபாய கட்டத்தை தாண்டவில்லை.- டாக்டர் ராஜு சிவசாமி, 'சிம்ஸ்' மருத்துவமனை

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ketheesh Waran - Bangalore,இந்தியா
17-ஏப்-202106:52:32 IST Report Abuse
Ketheesh Waran நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
17-ஏப்-202105:07:15 IST Report Abuse
Elango விரைவில் வீடு திரும்புவார்
Rate this:
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
17-ஏப்-202104:30:27 IST Report Abuse
G.Prabakaran விவேக் அவர்கள் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X