நீரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
லண்டன்: வங்கி கடன் மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள பிரபல தொழிலதிபர் நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கு பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, வைர வியாபாரி நீரவ் மோடி மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தன. இந்த நிலையில், பிரிட்டனுக்கு, அவர் தப்பிச் சென்றார்.
நீரவ் மோடி, Nirav Modi, britain, london

லண்டன்: வங்கி கடன் மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள பிரபல தொழிலதிபர் நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கு பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த, வைர வியாபாரி நீரவ் மோடி மீது, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்தன. இந்த நிலையில், பிரிட்டனுக்கு, அவர் தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தி, அழைத்து வருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பிரிட்டனில் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு, லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், நீரவ் மோடியை நாடு கடத்த அனுமதி வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


latest tamil news


இந்நிலையில், நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கு, பிரிட்டன் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் இந்திய பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இந்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால், நீரவ் மோடி விரைவில் நாடு கடத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-ஏப்-202117:02:30 IST Report Abuse
Lion Drsekar அன்று வந்த செய்தி வெளிநாட்டில் பணம் இருக்கிறது , எல்லோருக்கும் வழங்கப்படும், விரைவில் கைது .. இன்று வந்த செய்தி எல்லாப் பணமும் எடுக்கப்பட்டுவிட்டது ? அன்று வெளிநாடு தப்பித்து சென்றுவிட்டார், இன்று நீரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல்" நாளை விடுதலை செய்யப்பட்டார் . சரித்திரத்தை புரட்டி பார்த்தல் இதுதான் நடந்து இருக்கிறது, நல்லவேளை இவருக்காக எந்த ஒரு கமிஷனும் நியமிக்கப்படவில்லை, அந்த பணம் மிச்சம், வந்தே மாதரம்
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
18-ஏப்-202102:10:08 IST Report Abuse
தல புராணம்பி எம் கேர்ஸ் .....
Rate this:
Cancel
Velusamy Ramesh - Thanjavur,இந்தியா
17-ஏப்-202113:11:23 IST Report Abuse
Velusamy Ramesh IT IS NOT SUFFICIENT WE HAVE TO COLLECT THE MONEY BACK WITHOUT LOSS OF SINGLE PAISA
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
17-ஏப்-202112:33:00 IST Report Abuse
bal இந்த கேசும் இதனை வருங்களாக ஓடி கொண்டிருக்கிறது...ஒரு ஆங்கிலேயரை இந்தியாவில் இதனை நாள் வைத்திருக்க முடியுமா..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X