பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 8 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஏப்.16) 8 ஆயிரத்தை கடந்தது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 4,920 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 8.96 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கைதமிழகத்தில் இன்று (ஏப்.,16) 8,449 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஏப்.16) 8 ஆயிரத்தை கடந்தது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 4,920 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 8.96 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.



latest tamil news




தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை



தமிழகத்தில் இன்று (ஏப்.,16) 8,449 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 9,71,384 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 263 ஆய்வகங்கள் (அரசு- 69 மற்றும் தனியார்-194) மூலமாக, இன்று மட்டும் 97,201 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 2 கோடியே 9 லட்சத்து 76 ஆயிரத்து 696 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 5,116 பேர் ஆண்கள், 3,333 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,86,363 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,84,985 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.


டிஸ்சார்ஜ்



இன்று மட்டும் 4,920 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 96 ஆயிரத்து 759 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 33 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 18 பேர் தனியார் மருத்துவமனையிலும் 15 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,032 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 61,593 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிப்பு


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
16-ஏப்-202122:10:07 IST Report Abuse
g.s,rajan கொரோனா பீதியால் இல்லாத தொழிலும் அவுட் ,மக்கள் மரண பீதியில் வெளியே நடமாடுவதைக் குறைத்துக்கொண்டு விட்டனர் . ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
17-ஏப்-202107:48:11 IST Report Abuse
மனுநீதியார் சொன்னது? எவனும் மாஸ்க் அணியாமல் ஊரை சுற்றிக்கொண்டு வியாதியை பரப்பிக்கொண்டு இருக்கிறான். தேவையில்லாத கருத்துக்களை பதிவிடாமல் கட்டுப்பாடுகளை பின்பற்றும் வழிமுறைகளைப் பாருங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X