ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி ஜப்பானில் நடைபெறுமா?

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
டோக்கியோ: வரும் ஜூலை 23ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 8ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஜப்பானில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலை படிப்படியாக அதிகரித்து வருகிறது.இதனையடுத்து ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படுமா இல்லையா என்ற விவாதம் தற்போது ஜப்பானிய சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஒலிம்பிக் போட்டிகள்

டோக்கியோ: வரும் ஜூலை 23ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 8ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஜப்பானில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது அலை படிப்படியாக அதிகரித்து வருகிறது.



latest tamil news



இதனையடுத்து ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படுமா இல்லையா என்ற விவாதம் தற்போது ஜப்பானிய சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெறும் என்ற சூழ்நிலையே ஜப்பானில் நிலவுவதாக பிரதமர் யோஷிஹிடே சுகா தெரிவித்துள்ளார்.


ஒலிம்பிக் திட்டக்குழு ஆய்வு



ஒருவேளை இன்னும் மூன்று மாதங்களில் வைரஸின் தாக்கம் மேலும் அதிகரித்தால் ஒலிம்பிக் போட்டிகளை நிறுத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு அப்போதைய சூழலைப் பொறுத்தே இதற்கான முடிவு எடுக்கப்படும் என்று ஜப்பானிய அரசு மற்றும் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுவதற்கு முன்னதாக ஒலிம்பிக் ஜோதி முக்கிய இடங்களில் வலம்வருவது வழக்கம்.


latest tamil news



ஜப்பானின் முக்கிய நகரங்களில் ஒலிம்பிக் ஜோதியை பிரபலங்கள் பலர் ஏந்தி ஓட திட்டமிட்டிருந்த நிலையில் இவ்வாறு செய்தால் பிரபலங்களை காண சமூக இடைவெளியை மறந்து பலர் வீதிகளில் கூடுவர் என்பதால், குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே ஒலிம்பிக் ஜோதி இந்த ஆண்டு வலம்வரும் என்று ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை மாஸ்க் மற்றும் சமூக விலகலுடன் எவ்வாறு நடத்துவது என்று ஒலிம்பிக் திட்டக்குழு ஆராய்ந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
16-ஏப்-202119:35:28 IST Report Abuse
S.Baliah Seer வேண்டாம் ஒலிம்பிக் .ஊற்றி மூடுங்கள்.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
16-ஏப்-202119:34:58 IST Report Abuse
கொக்கி குமாரு ஹி...ஹி...ஹி...ஜப்பானில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று ஜப்பான் துணை முதல்வர் சுடலையாண்டி தெரிவித்தார். ஹி...ஹி...ஹி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X