ரயில் சேவை நிறுத்தமா? ரயில்வே வாரியம் விளக்கம்

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி, 'கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், சில குறிப்பிட்ட மாநிலங்களில் இருந்து ரயில் சேவைகளை நிறுத்தும்படி, ரயில்வே நிர்வாகத்திடம், மாநில அரசுகள் கோரிக்கை வைக்கவில்லை' என, ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.ரயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:அனைத்து ரயில் நிலையங்களிலும், பயணியருக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகின்றன.
 ரயில் சேவை ,ரயில்வே, வாரியம்

புதுடில்லி, 'கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், சில குறிப்பிட்ட மாநிலங்களில் இருந்து ரயில் சேவைகளை நிறுத்தும்படி, ரயில்வே நிர்வாகத்திடம், மாநில அரசுகள் கோரிக்கை வைக்கவில்லை' என, ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

ரயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:அனைத்து ரயில் நிலையங்களிலும், பயணியருக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகின்றன. நாடு முழுவதும்கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.ரயில் நிலையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக, பல ரயில் நிலைய நடைமேடை சீட்டுகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளன.


latest tamil newsகொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, 4,000 ரயில் பெட்டிகள் நாடு முழுவதும் தயார் நிலையில் உள்ளன.தேவைப்படும் மாநிலங்களில் இருந்து கூடுதல் ரயில்களை இயக்க, மண்டல பொது மேலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ரயில் சேவைகளில் பற்றாக்குறை எதுவும் இல்லை என்பதை உறுதியாக கூற முடியும். நாட்டில், 70 சதவீத ரயில் சேவைகள் இயங்கத் துவங்கியுள்ளன.கூடுதல் பயணியர் வருகையை சமாளிக்க, கூடுதலாக, 140 ரயில்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, குறிப்பிட்ட மாநிலங்களில் இருந்து, தங்களுக்கு ரயில் சேவைகளை ரத்து செய்யும்படி, எந்த மாநில அரசும் இதுவரை கோரிக்கை வைக்கவில்லை. ரயில் பயணங்களின் போது, தொற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமா, தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டுமா என்ற தகவல்கள், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளங்களில் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்
கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
18-ஏப்-202106:56:40 IST Report Abuse
g.s,rajan ரயில்வே துறையில் பெரும்பாலும் சாதி அரசியல் தலை விரித்து ஆடுது ,லஞ்சம் ஊழல் இன்னும் ஒரு படி மேலே உள்ளது .மேலும் அரசுத் துறையில் மத்திய மாநில மந்திரிகள் பாராளுமன்ற சட்ட மன்ற உறுப்பினர்கள்,அரசு அதிகாரிகள் ஊழியர்கள் ,ஒப்பந்ததாரர்கள் சும்மா புகுந்து விளையாடிக் கொள்ளை அடிக்கின்றனர்,சுருட்டுகின்றனர் லஞ்சம் மற்றும் ஊழலில் திளைக்கின்றனர் மேலும் .சாதி பெயரைப் பயன்படுத்தி வேலை செய்யாமல் சும்மா வந்து உட்கார்ந்து விட்டுப் போகின்றனர் .அதை மீறி கேட்டால் சாதி பெயரைச் சொல்லி இழிவு படுத்திவிட்டனர் என்று ஒரு கூட்டம் குய்யோ முறையோ என்று கத்தி பொய்க்கேஸும் போடுகின்றனர் அரசியல்வாதிகளின் துணையுடன் எந்த வித உழைப்பும் செய்யாமல் உலா வருகின்றனர் என்ன செய்வது ??சாதியால் ,இடஒதுக்கீட்டால் ,அரசுத் துறை அனைத்தும் கெட்டுப்போனது இன்னும் சொல்லப்போனால் அழிந்தது இந்தியா என்றால் இதே தனியார் துறையில் சாதி பெயரைப் பயன்படுத்தி குளிர் காய முடியுமா ??முடியவே முடியாது .இதுதான் நிதர்சனமான உண்மை .தகுதி ,திறமை அடைப்படை இல்லாமல் என்று சாதி நாட்டில் எங்கெல்லாம் புகந்ததோ அன்றில் இருந்து இந்தியா கொஞ்சம் கூட உருப்பட வாய்ப்பே இல்லை , ஜி.எஸ்.ராஜன் சென்னை . .
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
17-ஏப்-202107:52:36 IST Report Abuse
g.s,rajan ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்க அவர்கள் லாபத்தில் கொழிக்க அரசாங்கம் மொத்தத்தில் வழி செய்யுது ,மக்கள் உரிய ரயில் சேவை இல்லாமல் திண்டாடுகிறார்கள் ,பயணங்கள் மேற்கொள்வதில் பலத்த சிரமமும் அதிக செலவினங்களும் மக்களுக்கு ஏற்படுகிறது போக்குவரத்திற்கு தற்போது .தண்டச்செலவுதான்ஏகப்பட்ட செலவு செய்து தனியார் வாகனங்களில் பயணம் செய்ய அரசு நெருக்குது . எது எப்படியோ கொரோனா வியாதி பரவுவதைக் காரணம் காட்டி ரயில் சேவையை சுத்தமா நிறுத்தி மக்களின் பாவத்தை கொட்டிக்கிறீங்க .மக்கள் திண்டாடுகின்றனர் ,எத்தனையோ வியாதி வந்து மக்கள் நித்தம் சாகின்றனர் ,அவங்களுக்கு என்ன செஞ்சீங்க ???ஒன்னும் இல்லை பிறகு என்ன கரிசனம் .. ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
17-ஏப்-202114:22:02 IST Report Abuse
suresh kumarதனியார் துறையில் அந்த முதலாளிகளா எல்லா வேலையும் செய்கிறார்கள்? அல்லது அரசு துறையில் அந்த மந்திரிகளா எல்லா வேலையும் செய்கிறார்கள்? இல்லையே பிறகு ஏன் அரசு துறை நஷ்டமடைகிறது, அதே சேவை தனியார் துறை லாபத்தில் இயங்குகிறது?...
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
17-ஏப்-202105:20:50 IST Report Abuse
g.s,rajan பேசாம ஒரேடியா இந்தியாவை வேற நாட்டுக்கு வித்துடுங்க உங்களால பிரிட்டிஷ்காரனுங்க மாதிரி நாட்டை ஒழுங்கா நடத்த முடியல, எங்கும் எதிலும் ஊழல் .எல்லாத்தையும் நாசமாக்கியாச்சு ,இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை ,
Rate this:
VIDHURAN - chennai,இந்தியா
17-ஏப்-202114:12:44 IST Report Abuse
VIDHURANஅதி MEDHAAVI நீங்கள் வெளியே போய்விடுங்களேன்?...
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
17-ஏப்-202114:15:43 IST Report Abuse
suresh kumarநம்மளாலே, பிரிட்டிஷ்காரனுங்ககிட்டே இருந்த மாதிரி உங்ககிட்டே இருக்க முடியலன்னு அதையும் சொல்லணும். அதுதான் நியாயம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X