சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஏப் 16, 2021
Share
Advertisement
'நீங்கள் மாபெரும் கட்சியின் தலைவர்; நீங்கள் சட்டசபைக்குள் நுழைந்தால், மத்திய அரசுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும்... போங்க சார், போய், பிள்ளை குட்டிகளை படிக்க வையுங்க...' என, விரக்தி தெரிவிக்கத் தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேட்டி: மத்திய அரசுக்கு எதிராக, நான் தொடர்ந்து பேசி வருவதால், என்னை சட்டசபைக்குள் நுழைய விடாமல் தடுக்க, என்னென்ன

பேச்சு, பேட்டி, அறிக்கை

'நீங்கள் மாபெரும் கட்சியின் தலைவர்; நீங்கள் சட்டசபைக்குள் நுழைந்தால், மத்திய அரசுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும்... போங்க சார், போய், பிள்ளை குட்டிகளை படிக்க வையுங்க...' என, விரக்தி தெரிவிக்கத் தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேட்டி: மத்திய அரசுக்கு எதிராக, நான் தொடர்ந்து பேசி வருவதால், என்னை சட்டசபைக்குள் நுழைய விடாமல் தடுக்க, என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும், மத்திய அரசும், தமிழக அரசும் செய்து, பல சதிவேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.


'மக்கள் நம்பிக்கையை, மூட நம்பிக்கை என சொல்ல நீங்கள் யார்; எல்லாவற்றையும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியாது என்பதை அனைவரும் அறிவர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை:
குறிப்பிட்ட சில நாட்களை நல்ல நாட்கள் என கூறி, அந்த நாட்களில் பத்திரப்பதிவு செய்ய, வசதி செய்துள்ளது தமிழக அரசு. இது, பிற நாட்களை கெட்ட நாட்கள் என, மறைமுகமாக குறிப்பிடுகிறது. இது, மூட நம்பிக்கை தானே தவிர, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை அல்ல.


'நியாயமான முறையில் தேர்வு நடத்தப்படுவதற்காகத் தான், டி.என்.பி.எஸ்.சி., உள்ளது. அதிலும் குளறுபடியா; மாணவர்கள், இளைஞர்கள் நம்பிக்கையில் விளையாடாதீர்கள்...' என, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை:
ஆசிரியர் பணி தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு காரணமாக இருந்த, ஒன்பது, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை உடனடியாக அந்த பொறுப்பில் இருந்து விலக்கி, அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; ஆசிரியர் தேர்வு எழுதுவோருக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.


'இப்படித் தான், தமிழகம் முழுக்க, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில தலைவர் முருகன் பேச்சு:
பொதுவாகவே, பெண்கள், எம்.ஜி.ஆர்., - ஜெ., மற்றும் மோடிக்கு தான் அதிக அளவில் ஓட்டளிப்பர். தி.மு.க.,வுக்கு பெண்கள் ஓட்டு எப்போதும் விழாது. இந்த முறை பெண்கள் ஓட்டு, அதிகளவில் பதிவாகியுள்ளதால், அது, அ.தி.மு.க., கூட்டணிக்கு சாதகமாகத் தான் இருக்கும்.


'எதில் விளையாடினாலும் பொறுத்துக் கொள்வீர்கள்; ஈ.வெ.ரா., பெயருடன் விளையாடினால் மட்டும் பொறுத்துக் கொள்ளவே மாட்டீர்கள் என்பது, தமிழகம் அறிந்தது தானே...' என, கிண்டலாக சொல்லத் தோன்றும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை:
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையின் பெயர், ஈ.வெ.ரா., சாலையாக இருந்த நிலையில், அதை மாற்றி அமைத்துள்ள தமிழக அரசு, யாரை திருப்திபடுத்த இந்த நிலைப்பாட்டை எடுத்தது? உடனடியாக அந்த பெயரை மாற்றவில்லை என்றால், கடும் கிளர்ச்சியை சந்திக்க நேரிடும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X