சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லஞ்சம் அதிகரிப்பால் 'ரெய்டு' ஊராட்சிக்கு மர்ம கடிதம்

Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பல்லடம்:'ஊராட்சியில், லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது; ஐ.டி., ரெய்டு நடத்தப்படும்' என்று, பல்லடம் அருகே, ஊராட்சி தலைவருக்கு வந்த மர்ம கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கரடிவாவி ஊராட்சியில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சி அலுவலகத்துக்கு வந்த, முகவரி குறிப்பிடப்படாத கடிதத்தில், 'தலைவரே, தண்ணீர்

பல்லடம்:'ஊராட்சியில், லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது; ஐ.டி., ரெய்டு நடத்தப்படும்' என்று, பல்லடம் அருகே, ஊராட்சி தலைவருக்கு வந்த மர்ம கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கரடிவாவி ஊராட்சியில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சி அலுவலகத்துக்கு வந்த, முகவரி குறிப்பிடப்படாத கடிதத்தில், 'தலைவரே, தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. கால்நடைகள் தண்ணீரின்றி சிரமப்படுகின்றன. குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வர மாற்று வழி உள்ளது. இன்னும், 48 மணி நேரத்துக்குள் தண்ணீர் விடவில்லை எனில், திடீர் ரோடு மறியல் நடக்கும். கலெக்டர் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பப்படும்.

ஊராட்சி நிர்வாகத்துக்கு எதிராக, யாகம் நடத்தப்படும். வீட்டு அப்ரூவலில் லஞ்சம் ஊழல் கொடிகட்டி பறக்கிறது; ஐ.டி., ரெய்டு நடத்தப்படும். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை கொண்டு பிடிப்போம்' என்று எழுதப்பட்டுள்ளது.

ஊராட்சி தலைவர் ரஞ்சிதாவிடம் கேட்டதற்கு, 'விரிவாக்கத்துக்காக, சாலை தோண்டப் பட்டதில் தண்ணீர் வினியோகம் தடைபட்டுள்ளது. இப்போதுதான் குழாய் போடப்பட்டு வருகிறது. இதில் நாங்கள் என்ன செய்ய முடியும்? ஊழல் உள்ளதென்றால், ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும்; பொறாமையால் மொட்டை கடிதம் போட்டுள்ளனர்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanand Louis - Bangalore,இந்தியா
17-ஏப்-202121:48:05 IST Report Abuse
Devanand Louis மதுரை திருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் கொரோன தடுப்புஊசி கடந்த மூன்று தினங்களாக போடவில்லை ,காரணம் சரியாக வெளியிடப்படவில்லை ,பொதுமக்கள் தொலைதூரத்திலிருந்து வருபவர்கள் வேதனைப்படுகிறார்கள் . சரியான நடவடிக்கை தேவை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X