சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி மருந்து இல்லை: திருப்பூரில் பொதுமக்கள் ஏமாற்றம்

Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், கொரோனா தடுப்பூசி மருந்து தீர்ந்துவிட்டதால், ஆர்வத்துடன் தடுப்பூசி போட சென்றவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர்.திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி முகாம், 52 பகுதிகளில் நடந்து வருகிறது. மாநகராட்சியில், மக்கள் வசதிக்காக, கூடுதல் முகாம் அமைத்து தடுப்பூசி போடப்படுகிறது. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஒன்பது தாலுகா அரசு

திருப்பூர்:திருப்பூரில், கொரோனா தடுப்பூசி மருந்து தீர்ந்துவிட்டதால், ஆர்வத்துடன் தடுப்பூசி போட சென்றவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர்.

திருப்பூர் மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி முகாம், 52 பகுதிகளில் நடந்து வருகிறது. மாநகராட்சியில், மக்கள் வசதிக்காக, கூடுதல் முகாம் அமைத்து தடுப்பூசி போடப்படுகிறது. அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஒன்பது தாலுகா அரசு மருத்துவமனைகள், 13 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தடுப்பூசி முகாம் நடக்கிறது.

தனியார் மருத்துவமனைகளில், நேற்று காலை வரை, 16 ஆயிரத்து 963 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். மாநகராட்சி நகர்நல மையங்களில், 10 ஆயிரத்து, 618 பேர்; மருத்துவக் கல்லுாரி மற்றும் அரசு மருத்துவமனைகளில், 23 ஆயிரத்து, 398 பேர்; ஆரம்ப சுகாதார நிலையங்களில், 51 ஆயிரத்து, 885 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

வழக்கம் போல் தடுப்பூசி முகாம் நடந்து கொண்டிருந்த நிலையில், மருந்து தீர்ந்துவிட்டதென, மக்கள் திருப்பி அனுப்பப்பட்டதால், ஏமாற்றம் அடைந்தனர்.சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், ''கோவிஷீல்டு', 'கோவேக்சின்' தடுப்பூசி மருந்து கையிருப்பு தீர்ந்துவிட்டது. முன்கூட்டியே அரசுக்கு தகவல் அளித்திருந்தோம், விரைவில் வந்தவுடன், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanand Louis - Bangalore,இந்தியா
17-ஏப்-202121:47:13 IST Report Abuse
Devanand Louis மதுரை திருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் கொரோன தடுப்புஊசி கடந்த மூன்று தினங்களாக போடவில்லை ,காரணம் சரியாக வெளியிடப்படவில்லை ,பொதுமக்கள் தொலைதூரத்திலிருந்து வருபவர்கள் வேதனைப்படுகிறார்கள் . சரியான நடவடிக்கை தேவை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X