சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டியில் யானை 'உலா' கேரட் தோட்டம் சூறை

Added : ஏப் 16, 2021
Share
Advertisement
ஊட்டி:ஊட்டியில் ஊருக்குள் உலா வந்த காட்டு யானை, கேரட் தோட்டத்தை சேதப்படுத்தியது; வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டி புறநகர் பகுதியில் உள்ள காந்தள் குருசடி காலனி பகுதிக்கு, நேற்று முன்தினம் இரவு காட்டு யானை வந்துள்ளது. அங்குள்ள கேரட் தோட்டத்தில் புகுந்து சூறையாடி, அறுவடைக்கு தயாரான கேரட்ைட தின்று சென்றுள்ளது. தகவல் அறிந்து,
 ஊட்டியில் யானை 'உலா' கேரட் தோட்டம் சூறை

ஊட்டி:ஊட்டியில் ஊருக்குள் உலா வந்த காட்டு யானை, கேரட் தோட்டத்தை சேதப்படுத்தியது; வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி புறநகர் பகுதியில் உள்ள காந்தள் குருசடி காலனி பகுதிக்கு, நேற்று முன்தினம் இரவு காட்டு யானை வந்துள்ளது. அங்குள்ள கேரட் தோட்டத்தில் புகுந்து சூறையாடி, அறுவடைக்கு தயாரான கேரட்ைட தின்று சென்றுள்ளது. தகவல் அறிந்து, வனத்துறையினர் ஆய்வு செய்தனர். யானை கால்தடம் காணப்பட்டது. வனக் குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியை ஒட்டிய வனத்தில் குறுக்குப்பாதை வழியாக, ஊட்டி புதிய படகு இல்லம் மற்றும் தீட்டுக்கல் செல்ல வாய்ப்புள்ளதால் அங்கும் கண்காணிக்கப்படுகிறது.நீலகிரி கோட்ட உதவி வன பாதுகாவலர் சரவணன் கூறுகையில்,''கல்லட்டி பள்ளதாக்கில் இருந்து, அத்திக்கல், தலைகுந்தா வழியாக, வழிமாறி காட்டு யானை வந்திருக்கும். ஊட்டியில் குடியிருப்பு அருகே வந்ததால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X