பொது செய்தி

இந்தியா

ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை; மத்திய அரசு சிறப்பு அனுமதி

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்து ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை இந்திய அரசு மருத்துவமனைகளில் அதிகரித்துள்ளது.அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு அதிக அளவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன. தற்போது ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு

புதுடில்லி: தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்து ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை இந்திய அரசு மருத்துவமனைகளில் அதிகரித்துள்ளது.latest tamil newsஅவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு அதிக அளவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன. தற்போது ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக பல அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் விழிபிதுங்கி வருகின்றனர்.
மத்திய அரசு இதற்கு ஒரு தீர்வை கொண்டு வர வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து மோடி அரசு ஆக்சிஜன் சிலிண்டர் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.


தடையில்லைடில்லி உள்ளிட்ட பகுதிகளில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல தொழிற்சாலைகளை மூட வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை அதிகரிப்பதன் காரணமாக அனைத்து நாட்களிலும் 24 மணிநேரமும் இந்த தொழிற்சாலை செயல்பட மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தடையில்லாமல் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மருத்துவமனைக்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.


latest tamil newsமேலும் ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் செல்ல போக்குவரத்து போலீசார் எந்த சோதனையும் இன்றி அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanand Louis - Bangalore,இந்தியா
17-ஏப்-202121:50:41 IST Report Abuse
Devanand Louis மதுரை திருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் கொரோன தடுப்புஊசி கடந்த மூன்று தினங்களாக போடவில்லை ,காரணம் சரியாக வெளியிடப்படவில்லை ,பொதுமக்கள் தொலைதூரத்திலிருந்து வருபவர்கள் வேதனைப்படுகிறார்கள் . சரியான நடவடிக்கை தேவை .
Rate this:
Cancel
தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. - DMK வெற்றிக்கு பாடுபட்டோருக்கு நன்றி ,இந்தியா
17-ஏப்-202114:33:07 IST Report Abuse
 தி.மு.க.,வின் இதய உதயசூரியன் உதயமாகிறது. ராஞ்சி: சிகிச்சை கிடைக்காமல் மருத்துவமனை வாசலிலேயே உயிரிழந்த அப்பா... பொங்கி எழுந்த மகள் இவ்வளவு ஏன்? குறைந்தபட்சம் முதலுதவியைக்கூட அவர்கள் வழங்கவில்லை. தன்னுடைய தந்தைக்கு சிகிச்சை தர வேண்டி அந்தக் கொரோனா நோயாளியின் மகள் கண்ணீர் மல்கப் பேசியிருந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. தன் அப்பாவை இழந்ததால் வெடித்துக் கதறிய அந்த மகள் மருத்துவமனை வளாகத்திலேயே, மதிப்புக்குரிய அமைச்சர் அவர்களே... மருத்துவரின் உதவி வேண்டி ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இந்த மருத்துவமனையில் நாங்கள் அலைந்து திரிந்தோம். ஆனால், எந்த மருத்துவ உதவியும் கிடைக்காத நிலையில் என்னுடைய அப்பா இறந்துவிட்டார். உங்களது ஒட்டு வங்கியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மட்டுமே நீங்கள் இந்த மருத்துவமனை ஆய்வுக்கு வந்துள்ளீர்கள்” என்று இறந்தவரின் மகள் அமைச்சரை குறிப்பிட்டு அழுகையுடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தந்தையை இழந்த இந்த இளம்பெண்ணின் கண்ணீர் என்னை உலுக்கிவிட்டது. சிகிச்சை தராமல் அலைக்கழித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா இதற்கு பதில் தெரிவித்துள்ளார். இனி என்ன செய்து என்ன பயன்? விலை மதிப்பில்லாத அந்த உயிர் மீண்டும் திரும்பி வந்துவிடுமா என்ன? இச்சம்பவம் பல இடங்களில் நடைபெறுகிறது. ஒரு உயிர் என்பது விலை மதிப்பற்றது. இந்த வித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மருத்துவர்கள் கால தாமதம் இன்றி சிகிச்சை அளிப்பது அவசியமாகும்.
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
17-ஏப்-202115:32:02 IST Report Abuse
கொக்கி குமாரு ஒருவேளை நீங்கள் கிராமத்தில் வசிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த கிராமத்தில் நிறைய திருடர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். உங்கள் கிராமத்தில் இருந்து 2000 கிலோமீட்டர் தொலைவில் மற்றொரு கிராமம் இருக்கிறது என்றும் வைத்துக்கொள்வோம். அந்த கிராமத்திலும் நிறைய திருடர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். முதலில் உங்கள் கிராமத்தில் இருக்கும் திருடர்களால் உங்களுக்கு வரும் பாதிப்பை நினைத்து அவர்களை சுட விரும்புவீர்களா? அல்லது 2000 கிலோமீட்டர் தாண்டி தற்போதைக்கு உங்களுக்கு தொந்தரவு தராத திருடர்களை சுட விரும்புவார்களா? முதலில் உங்களை சுற்றியுள்ள திருடர்களை சரிகட்டிவிட்டு, ஆற அமர்ந்து 2000 கிலோமீட்டர் தாண்டி உள்ள திருடர்களை பற்றி யோசிக்கலாம். பக்கத்தில் உள்ள கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, ஒரிசாவை விட்டுவிட்டு மோடிஜி எதிர்ப்பு என்ற போர்வையில் நேராக உத்திரப்பிரதேசத்துக்கு ஓட வேண்டியது. விளங்கிடும்....பின்குறிப்பு: உங்கள் கிராமம் என்று சொன்னது தமிழ்நாட்டை, திருடர்கள் என்று சொன்னது திருட்டு திமுகவினரை, புரிஞ்சா சரி....
Rate this:
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
17-ஏப்-202112:59:21 IST Report Abuse
Devanand Louis சென்னை-கிண்டி மின் உரிமம் வழங்கும் அலுவலகத்தில்( தமிழ் நாடு எலக்ட்ரிகல் லைசென்சிங் போர்டு ) லஞ்சம் வாங்கும் கொடுமையான தொழில், நிர்வாக சீர்கேடு ,தமிழ் நாடு அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்படாமலிருத்தல்,அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் -சென்னை-கிண்டி மின் உரிமம் வழங்கும் அலுவலகத்தில் உள்ள அணைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் எல்லோரும் லஞ்சம் வாங்குவதுதான் அவர்களின் தலையாய வேலை, லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு சின்ன வேலை அங்கு நடக்காது, பலவித தில்லுமுல்லு வேலைகளையும் செய்து எல்லா அலுவல் பணிகளுக்கும் லஞ்சம் கேட்கிறார்கள் மேலும் தமிழ் நாடு அரசுக்கு வரும் வருவாயை வரவிடாமல் கெடுக்கிறார்கள். கொரோனாவால் நாடே பாதிப்படைந்துள்ளது ,மக்கள் கொரானாவால் மனநலம் மற்றும் வருவாய் இல்லாத இந்த நேரத்தில் சென்னை-கிண்டி மின்சார உரிமம் வழங்கும் வாரியத்தின் மனித நேயமில்லாத லஞ்சம் வாங்கும் சர்வாதிகாரம் கொண்ட அதிகாரிகள், பொதுமக்கள் எல்லோரும் சென்னை-கிண்டி மின் உரிமம் வழங்கும் அலுவலகத்தில் இந்த கேடுகெட்ட வேலைகளால் மிகவும் கொதிப்படைந்துள்ளார்கள் ஆகையால் விஜிலென்ஸ் ரைடு தேவை சென்னை-கிண்டி மின் உரிமம் வழங்கும் அலுவலகத்திற்கு ,மேலும் அங்குள்ள டெலிபோன் நம்பர்களை 04422500291 & 04422500494 & 04422500036 தொடர்புகொண்டாள் யாரும் வேண்டுமென்றே டெலிபோனை எடுப்பதில்லை. கண்டிப்பாக விஜிலென்ஸ் ரைடு தேவை ,தினமலரின் உதவியும் தேவை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X