ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை; மத்திய அரசு சிறப்பு அனுமதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை; மத்திய அரசு சிறப்பு அனுமதி

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (14)
Share
புதுடில்லி: தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்து ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை இந்திய அரசு மருத்துவமனைகளில் அதிகரித்துள்ளது.அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு அதிக அளவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன. தற்போது ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு

புதுடில்லி: தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்து ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை இந்திய அரசு மருத்துவமனைகளில் அதிகரித்துள்ளது.



latest tamil news



அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கு அதிக அளவில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன. தற்போது ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக பல அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் விழிபிதுங்கி வருகின்றனர்.
மத்திய அரசு இதற்கு ஒரு தீர்வை கொண்டு வர வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து மோடி அரசு ஆக்சிஜன் சிலிண்டர் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.


தடையில்லை



டில்லி உள்ளிட்ட பகுதிகளில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல தொழிற்சாலைகளை மூட வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை அதிகரிப்பதன் காரணமாக அனைத்து நாட்களிலும் 24 மணிநேரமும் இந்த தொழிற்சாலை செயல்பட மத்திய அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தடையில்லாமல் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மருத்துவமனைக்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.


latest tamil news



மேலும் ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவமனைக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் செல்ல போக்குவரத்து போலீசார் எந்த சோதனையும் இன்றி அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X