'ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்'

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை : 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குள், வெளிநபர்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது. அந்த பகுதி முழுதும் போதிய பாதுகாப்பு போட வேண்டும்' என, தேர்தல் கமிஷனிடம், தி.மு.க., சார்பில், கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அனுப்பியுள்ள மனு: சட்டசபை தேர்தல் முடிந்துள்ள, 234 தொகுதிகளிலும், அனைத்து மின்னணு
'ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு, வேண்டும்'

சென்னை : 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குள், வெளிநபர்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது. அந்த பகுதி முழுதும் போதிய பாதுகாப்பு போட வேண்டும்' என, தேர்தல் கமிஷனிடம், தி.மு.க., சார்பில், கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அனுப்பியுள்ள மனு: சட்டசபை தேர்தல் முடிந்துள்ள, 234 தொகுதிகளிலும், அனைத்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், பாதுகாப்பாக இருப்பதையும், எந்தவிதமான முறைகேடும் செய்ய முடியாது என்பதையும், உறுதிப்படுத்த வேண்டும். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை அமைந்துள்ள பகுதிக்குள், வெளிநபர்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது. எந்த விதமான வாகனங்களையும், வளாகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது.

'வைபை' இணைப்புகளை செயல் இழக்கச் செய்ய வேண்டும். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறை பகுதிக்கு செல்ல, அனுமதி பெற்றுள்ள நபர்களின் பட்டியலை வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை, முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்.பி.,க்கள் ராசா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர், நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கினர்.


குடும்பத்துடன் கொடைக்கானல் பயணம்



தமிழக சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோர், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் ஓய்வில்லாமல் தொடர்ந்து பிரசாரத்தில் இருந்ததாலும், ஓட்டு எண்ணிக்கை, மே, 2ல் நடப்பதாலும், தற்போது ஓய்வெடுக்க முடிவெடுத்தனர். அதன்படி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் உள்ளிட்ட அவர்களது குடும்ப உறுப்பினர்கள், 17 பேர், நேற்று காலை இரண்டு தனி விமானங்களில், மதுரை சென்றனர். அங்கிருந்து காரில் கொடைக்கானல் சென்றனர். 'ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், கொடைக்கானலில் மூன்று நாட்கள் தங்கி ஓய்வெடுப்பர்' என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-ஏப்-202100:04:43 IST Report Abuse
Mani . V "நான் என் குடும்பத்துடன் ஜாலி டூர் செல்வதால் தொண்டர்கள் தங்கள் உயிரை கொடுத்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்". ஹல்லோ மிஸ்டர். ஸ்டாலின், ஏற்கனவே அவர்கள் கேம் விளையாட ஆரம்பித்தாகி விட்டது. நீங்கள் ஜாலி டூர் முடித்து வரும்பொழுது எல்லாம் கை மீறி போயிருக்கும்.
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
17-ஏப்-202121:39:18 IST Report Abuse
GANESUN தேர்தல் வரவு செலவு கணக்கு பார்க்க இந்த பயணம். தளபதி: எல்லாரும் எவ்வளவு சம்பாதிக்கலாம்னு திட்டம் வெச்சிருக்கீங்க? உ நிதி: சாம்பாதிக்கரத அப்பறம் பாத்துக்கலாம். மொதல்ல வட நாட்டு அம்மனுக்கு முழு செட்டில் சென்றிருங்க தாத்தா மாதிரி நெஞ்சில நீ இருக்க இந்த மாதிரி பேசினா, அவனுக்கு புரியாது..இப்படியாக பேசி இரவு கழிந்தது..
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
17-ஏப்-202120:25:08 IST Report Abuse
தமிழ்வேள் கொரோனா பரவல் நேரத்தில் எட்டு கார்களில் கூட்டம் கூட்டி கும்மியடிப்பது மட்டும் எப்படி அனுமதிக்கப்படுகிறது ? சுடலைக்கு தனி சட்டம் ஏதாவது இருக்கிறதா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X