பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணிக்கை :அதிகாரிகள் ஆலோசனை

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை :ஓட்டு எண்ணிக்கை பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது.தேர்தல் கமிஷன் சார்பில், பீஹார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சீனிவாசா, தேர்தல் கமிஷன் செயலர் மதுசுதன் குப்தா, தேர்தல் கமிஷனின் பார்வையாளர் விப்பின் கட்டாரா ஆகியோர், நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன்
 ஓட்டு, எண்ணிக்கை , அதிகாரிகள், ஆலோசனை

சென்னை :ஓட்டு எண்ணிக்கை பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது.

தேர்தல் கமிஷன் சார்பில், பீஹார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சீனிவாசா, தேர்தல் கமிஷன் செயலர் மதுசுதன் குப்தா, தேர்தல் கமிஷனின் பார்வையாளர் விப்பின் கட்டாரா ஆகியோர், நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, ஓட்டு எண்ணிக்கை நடக்கும் மையங்களில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்; ஓட்டு எண்ணிக்கையை எவ்வாறு துவக்க வேண்டும்; தபால் ஓட்டுகளை எவ்வாறு எண்ண வேண்டும் என்பது குறித்து, ஆலோசனைகள் வழங்கினர்.இக்கூட்டத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜாராமன், இணை தலைமை தேர்தல் அதிகாரி ஆனந்த், மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
17-ஏப்-202114:16:46 IST Report Abuse
J.Isaac இரவு நேரத்தில் மட்டும் ஏன் லாரிகள் வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்திற்குள் வர வேண்டும்? இதற்கு பதில் சொல்லமாட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X