சி.ஐ.சி.எஸ்.இ.,தேர்வு தள்ளிவைப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சி.ஐ.சி.எஸ்.இ.,தேர்வு தள்ளிவைப்பு

Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி :அடுத்த மாதம் நடக்கவிருந்த, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக, சி.ஐ.சி.எஸ்.இ., நிர்வாகம் அறிவித்துள்ளது. டில்லி, ராஜஸ்தான், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. பல மாநிலங்களின் கல்வி வாரியங்கள், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை தள்ளி வைத்துள்ளன. இந்நிலையில், சி.ஐ.சி.எஸ்.இ.,
சி.ஐ.சி.எஸ்.இ.,தேர்வு   தள்ளிவைப்பு

புதுடில்லி :அடுத்த மாதம் நடக்கவிருந்த, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக, சி.ஐ.சி.எஸ்.இ., நிர்வாகம் அறிவித்துள்ளது.

டில்லி, ராஜஸ்தான், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. பல மாநிலங்களின் கல்வி வாரியங்கள், 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை தள்ளி வைத்துள்ளன.

இந்நிலையில், சி.ஐ.சி.எஸ்.இ., எனப்படும், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி, கெர்ரி அரதுான் கூறியதாவது:


latest tamil news




கொரோனா பரவல் காரணமாக, மே, 4ம் தேதி, சி.ஐ.சி.எஸ்.இ., பாடத்தின் திட்டத்தின் கீழ் நடக்கவிருந்த, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் எப்போது தேர்வு நடத்துவது என்பது குறித்து, ஜூன் முதல் வாரம் ஆய்வு செய்யப்படும்.

மேலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இரு வாய்ப்புகள் வழங்கப்படும். அவர்கள் விரும்பினால், பள்ளிக்குச் சென்று தேர்வு எழுதலாம் அல்லது நிர்வாகத்தின் வெளிப்படையான மதிப்பீட்டு வழிமுறையை தேர்ந்தெடுக்கலாம். பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு தேதி பின்னர் முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X