பிரிட்டனில் உண்மையான 'பால் ஆறு'; இணையத்தில் வைரல்

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
வேல்ஸ்: 'பால் மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா' என்று ஒரு தமிழ் சினிமா கவிஞர் பாடினார். மே மாதம் படத்தில் வரும் இந்த பாடல் வரி போலவே தற்போது பிரிட்டனில் உள்ள ஓர் ஆறு நிஜமாகவே பாலாறு ஆகியுள்ளது. இந்த வீடியோ தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது.பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் உள்ள டூலியஸ் என்கிற ஆற்றில் பாலை ஏற்றிச்சென்ற பெரிய டிரக் விபத்துக்குள்ளாகியது.

வேல்ஸ்: 'பால் மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா' என்று ஒரு தமிழ் சினிமா கவிஞர் பாடினார். மே மாதம் படத்தில் வரும் இந்த பாடல் வரி போலவே தற்போது பிரிட்டனில் உள்ள ஓர் ஆறு நிஜமாகவே பாலாறு ஆகியுள்ளது. இந்த வீடியோ தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது.



latest tamil news



பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் உள்ள டூலியஸ் என்கிற ஆற்றில் பாலை ஏற்றிச்சென்ற பெரிய டிரக் விபத்துக்குள்ளாகியது. ட்ரக்கில் ஏற்றி வந்த பல லிட்டர் பால் ஆற்றில் கொட்டியது. இதனை அடுத்து ஆறு செல்லும் பாதைகள் பால் தண்ணீருடன் கலந்து சென்றது. இதனை அப்பகுதியில் வசிக்கும் பலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர்.


latest tamil news





மக்கள் நிம்மதி


நிஜமாகவே பாலாறு ஓடினால் எவ்வாறு இருக்கும் என்று பாருங்கள் என கேப்ஷன் இட்டு பலர் இதனை பகிர்ந்தனர்.அதிகாலை இந்த விபத்து நேர்ந்ததால் இந்த ஆறு ஓடும் பகுதியில் வசித்துவந்த கிராம மக்கள் ஆறு திடீரென வெள்ளை நிறத்தில் ஓடியதை கண்டு அதிர்ந்தனர். ரசாயனம் ஏதாவது ஆற்றில் கலந்து இருக்குமோ என்று அஞ்சினர். பின்னர் ஆற்றில் பால் கலந்தது தெரியவந்து நிம்மதி அடைந்தனர். சில மணி நேரங்களில் இந்த பால் ஆற்றோடு சென்று கடலில் கலந்தது. ஆறு பழைய நிறத்துக்கு மாறியது. இச்சம்பவம் பிரிட்டனில் வைரலாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
17-ஏப்-202121:00:50 IST Report Abuse
THINAKAREN KARAMANI நம்ம ஊர்லேயும் பாலாறு என்ற பெயரில் ஒரு ஆறு இருக்கிறது . அதில் பாலும் ஓடவேண்டாம் மோரும் ஓடவேண்டாம் கொஞ்சமாக தண்ணி போனாக்கூட போதும். அந்தத் தண்ணியைப் பார்ப்பதற்கே பல வருடங்கள் காத்திருக்க வேண்டும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
17-ஏப்-202117:04:30 IST Report Abuse
ShivRam ShivShyam சும்மா வைரலாகியுள்ளது என போடவேண்டாம் ..ஏதோ இன்னொரு வைரஸ் தான் வந்துவிட்டதோ என்று நினைக்க தோன்றுகிறது
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
17-ஏப்-202112:59:25 IST Report Abuse
Ramesh Sargam ஐயோ, போச்சே... நம்ம ஊர்ல இப்படி நடந்திருந்தால், உடனே பலபேர் அந்த 'பாலாற்று' நீரில் டீ , காப்பி போட்டு நாலு காசு சம்பாதித்திருப்பார்கள்... ஐயோ, போச்சே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X