பொது செய்தி

தமிழ்நாடு

இடிந்தது 'ஸ்மார்ட் சிட்டி'சுவர்: 2 அதிகாரிக்கு 'மெமோ'

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
கோவை :கோவையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணி குளத்தின் தடுப்புச் சுவர், மழைக்கு இடிந்து விழுந்ததால், இரு அதிகாரிகளுக்கு, 'மெமோ' கொடுக்கப்பட்டது; ஒப்பந்த நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.கோவை நகர் பகுதியில் உள்ள, ஒன்பது குளங்களில், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. திறப்பு விழா உக்கடம் பெரிய குளத்தின் தென்கரையில்,
 'ஸ்மார்ட் சிட்டி ' சுவர் இடிந்தது, 2 அதிகாரிகள், 'மெமோ'

கோவை :கோவையில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணி குளத்தின் தடுப்புச் சுவர், மழைக்கு இடிந்து விழுந்ததால், இரு அதிகாரிகளுக்கு, 'மெமோ' கொடுக்கப்பட்டது; ஒப்பந்த நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.கோவை நகர் பகுதியில் உள்ள, ஒன்பது குளங்களில், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகின்றன.


திறப்பு விழாஉக்கடம் பெரிய குளத்தின் தென்கரையில், 62.17 கோடி ரூபாயில், 'எஸ்.கதிர்வேல் அண்டு கம்பெனி' நிறுவனத்தினர், பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் பணி முழுமையாக முடியவில்லை. அதற்குள், தேர்தல் அவசரம் என கூறி, பிப்., 26ல், திறப்பு விழா நடத்தப்பட்டது. ஆனால், இன்று வரை மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. நிலுவையில் உள்ள பணிகள், தொடர்ந்து செய்யப்படுகின்றன.'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் துவங்கிய காலத்தில் இருந்தே, தரமின்றி மேற்கொள்வதாக புகார்கள் எழுந்தன. மாநகராட்சி அதிகாரிகள், அதை பொருட்படுத்தவில்லை.

பரிந்துரைகடந்த, 15ம் தேதி இரவு பெய்த கன மழைக்கு, குளக்கரையில், 15 அடி உயரத்துக்கு செங்கற்களால் கட்டியிருந்த தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.நல்ல வேளையாக, அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால், பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.இச்சம்பவத்தில் ஒப்பந்ததாரர் மீதும், அதிகாரிகள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வியை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் எழுப்பிஇருந்தார்.இந்நிலையில், உதவி பொறியாளர் கல்யாண சுந்தரம், உதவி நிர்வாக பொறியாளர் உமாதேவி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு, 'மெமோ' கொடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்க, கமிஷனர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.


கூடுதல் செலவுமாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் அறிக்கை:செங்கல் தடுப்புச்சுவர் எக்காரணத்தால் சரிந்து விழுந்தது என்பதை அறிய, அண்ணா பல்கலை கட்டடவியல் துறை தொழில்நுட்ப வல்லுனர் குழுவை நியமித்து, ஆய்வு மேற்கொண்டு அறிக்கை பெறப்படும்.தொழில்நுட்ப தவறு இருப்பின், ஒப்பந்த நிறுவனம் மற்றும் திட்ட மேற்பார்வை ஆலோசனை நிறுவனத்தார் மற்றும் களப்பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.சம்பவ இடத்தில் இடிபாடுகள் அகற்றப்பட்டு, கான்கிரீட் சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கூடுதல் செலவினங்கள் அனைத்துக்கும் ஒப்பந்ததாரர் மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசக நிறுவனங்கள் பொறுப்பு ஏற்பர்.இவ்வாறு, கமிஷனர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-ஏப்-202120:32:47 IST Report Abuse
Bhaskaran Cement payan paduthinaargalaa allathu verum man payanpaduthinaargalaa
Rate this:
Cancel
MURUGESAN - namakkal,இந்தியா
17-ஏப்-202118:47:48 IST Report Abuse
MURUGESAN பணத்தை வாங்கிக்கொண்டு ஊழல் கட்சிகளுக்கு வாக்களித்துக் கொண்டிருக்கும் வரை இது மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும். நேர்மையான ஆட்சியாளர்களை மக்கள் தேர்ந்தெடுக்க முன்வராதவரை மக்கள் வரிப்பணம் இப்படி வீணாவது தொடரும். இதையெல்லாம் தட்டிக்கேட்க துணிச்சலான நேர்மையான தலைமை நமக்கு அவசியம். ஆனால் இது இந்த காலத்துக்கு ஒத்து வராது என்றே நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பேர் சொல்வார்கள். ஆகவே மாற வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் அல்ல இது இந்த காலத்துக்கு ஒத்து வராது என்று கூறும் அந்த தொண்ணூறு சதவீதம் பேர் தான். இவர்கள்தான் நம் நாட்டில் ஊழலும் லஞ்சமும் குடிகொண்டுள்ளதற்கு முக்கிய காரணம். முடியாது, நடக்காது, மாறாது, மாற்ற முடியாது, அதெல்லாம் சாத்தியமில்லை என்று எதிர்மறை சிந்தனைகளை விதைத்து அதன்மூலம் ஆதாயம் தேடி கொண்டிருக்கும் இவர்கள் இந்த நிலையை மற்ற முன்வருபவர்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதே உண்மை நிலை.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
17-ஏப்-202117:26:30 IST Report Abuse
RajanRajan அரசின் லஞ்ச ஊழலில் கட்டப்படும் எந்த அஸ்திவாரமும் இந்த கதிகேடாகும் என்பதே திராவிட வரலாறு. ஆனால் அவனுங்க கட்டுர திருட்டு வுடுமட்டும் சுனாமிலே கூட அசையாது நிற்கும். அப்படி ஒரு விந்தை திராவிட ஆட்சி தான் தமிழகம் கண்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X